Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | உலகில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 200ஐ தாண்டியது

RADIOTAMIZHA | உலகில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 200ஐ தாண்டியது

உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 200ஐ தாண்டியுள்ளது.

இன்றும் உலக நாடுகளில் கொரோனாவுக்கு  100 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 15 பேரும், அதன் அண்டை நாடான அமெரிக்காவில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் சீனாவில் 6 பேரும், தென்கொரியாவில் 4 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், இஸ்ரேலில் 5 பேரும், பாகிஸ்தானில் 4 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுபோல பல்வேறு நாடுகளிலும் உயிரிழந்த 100 பேரையும் சேர்த்து உலகில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 200ஐ தாண்டியுள்ளது.

இதேபோல் மேலும் 3 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ரஷ்யாவில் 770 பேருக்கும், அமெரிக்காவில் 340 பேருக்கும், டென்மார்க்கில் 250 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானில் 170 பேருக்கும், ஆஸ்திரியாவில் 131 பேருக்கும், இஸ்ரேலில் 119 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து, உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகமுள்ள பகுதியாக நியூயார்க் மாகாணம் திகழ்கிறது. இதனால் அந்த மாகாணத்திலுள்ள நியூயார்க் சிட்டி போன்ற பெருநகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் 96 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறுவோர் கண்டதும் சுடப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டூடெர்ட் எச்சரித்துள்ளார்.

உலகில் கொரோனாவில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 6 லட்சத்து 95 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 35 ஆயிரத்து 700 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...