Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | உலகம் முழுவதும் 75,000-ஐ நெருங்கும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் 75,000-ஐ நெருங்கும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் 208 நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் இரண்டே முக்கால் லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு தொற்று பாதித்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. பிரிட்டனில் 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 300 ஐ கடந்து விட்டது.

ஸ்பெயினில் ஒரே நாளில் 700 பேர் இறந்ததால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அதே போன்று இத்தாலியிலும் 636 பேர் இறந்ததால் உயிரிழப்பு 16 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.

ஈரான், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை நிலவரப்படி உலக அளவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கையும் 13 லட்சத்தை தாண்டி விட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...