Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்கும் நிலையில், கொடுந்தொற்றுக்கு 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

ஊரடங்கு, பரவலாக்கப்பட்ட பரிசோதனை என தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் பாதிப்பு என்னவோ நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது.

அந்த வகையில் உலகம் முழுதும் கொடிய கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 41 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

அதிகளவிலான பாதிப்புகளால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 80 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கடுத்தபடியாக ஸ்பெயினில் 2 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

ஆரம்பத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்த ரஷ்யாவில் தற்போது பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 11 ஆயிரத்து 656 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 94 பேரையும் சேர்த்து 2009 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கடுத்தபடியாக இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO

வைரசைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்து தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு ...

%d bloggers like this: