Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம்: பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது!

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம்: பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது!

உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சுமார் ஆறே முக்கால் லட்சம் பேர்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க, முனைப்பான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 700 ஐ கடந்து விட்ட நிலையில், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 319 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.இத்தாலியை பொறுத்தவரை, ஒரே நாளில் 889 பேர் பலியானதால், அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக அதிகரித்து, முதலிடம் வகிக்கிறது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் உயிரிழப்பு 2 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை – 81 ஆயிரத்து 439 பேர். அந்நாட்டில் உயிரிழப்பு 3 ஆயிரத்து 300 ஆக உள்ளது.

ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73 ஆயிரத்து 235 ஆகவும், உயிரிழப்பு 5 ஆயிரத்து 982 ஆகவும் அதிகரித்துள்ளது. ஈரானில் 38 ஆயிரத்து 309 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 2 ஆயிரத்து 640 ஆக உயர்ந்துளளது. இதுதவிர, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.

கொரோனாவுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை உலக சுகாதார நிறுவனம் தேர்வு செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ, குண மடைந்து, வீடு திரும்பி உள்ளார்.அதேநேரம், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்த 86 வயது ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.

உலகம் முழுவதும் கொரோனா பீதியில் உறைந்திருக்க, எதைப் பற்றியும் கவலைப்படாமல், வட கொரியா மட்டும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்ந்து ஈடுபட்டு வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...