Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மேலும் இருவர் கைது!!

RADIOTAMIZHA | உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மேலும் இருவர் கைது!!

கடந்த ஏப்ரல் இடம்nhற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்குதல்தாரிகளுக்கு உதவிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் குண்டு தாக்குதலை மேற்கொண்டவரை நடத்தியவரை விசாரணைக்கு உட்படுத்தியன் அடிப்படையில் .இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதெரிவித்தார்.இந்த சந்தேக நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திபில் கைதுசெய்யக்கட்டவர்களுள் ஒருவர் கொத்தட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் குண்டுகளை எடுத்துச் செல்ல வசதிகள் செய்துள்ளார்.இ அத்துடன் மற்றைய நபர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபருக்கு உதவி புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது இடம்பெற்று வரும் விசாரணைகளின் மூலம் மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜாலிய சேனாரத்ன குறித்த சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் தொடர்பில் தற்போது எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல தொடர்பான விசாரணைகள் புதிய தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...