Home / சமையல் / RADIOTAMIZHA | உடலுக்கு பலம் தரும் சத்தான பொரி உருண்டை

RADIOTAMIZHA | உடலுக்கு பலம் தரும் சத்தான பொரி உருண்டை

விநாயகரை வழிபடும் போது அவருக்கு பிடித்தமான பொரி உருண்டை செய்து, படைத்து வழிபடுவது சிறப்பு. மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மற்றும் மிகவும் சுவையான ஸ்னாக் இந்த பொறி உருண்டை . இதனை சுலபமாக வீட்டிலே தயார் செய்து விடலாம்.

பொரி உருண்டை செய்ய தேவையான பொருட்கள்: – பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்கு பவுடர் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

பொரி உருண்டை செய்முறை:

முதலில் ஒரு கடாயில் வெல்லத்தினை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகினை தயார் செய்து கொள்ளவும். வெல்லம் நன்றாக பாகு நிலையினை அடைந்தவுடன் அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனை வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய பாகினை மீண்டும் கடாயில் ஊற்றி அதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு அடுப்பினை மிதமான சூட்டில் வைத்து அதில் பொரியினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்போது அடுப்பினை அனைத்து சூடு ஆறுவதற்குள் அதனை உருண்டை வடிவில் பிடித்து தட்டில் வைத்து ஆறவைக்கவும். இவ்வாறு அனைத்து பொரியினையும் உருண்டை பிடித்து ஆறவைத்து எடுத்தால் சுவையான பொரி உருண்டை தயார்.

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA |மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: ...

%d bloggers like this: