Home / விளையாட்டுச் செய்திகள் / RADIOTAMIZHA | இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேலவுக்கு புதிய பதவி

RADIOTAMIZHA | இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேலவுக்கு புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த கூட்டத்தின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 12 வருடங்களாக SSC விளையாட்டு கழகத்தின் தலைவராக செயற்பட்ட சமந்த தொடன்வல கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளை இளம் தலைவர் ஒருவர் முன்னெடுக்க வேண்டுமென கூறி பதவியில் இருந்து விலகியிருந்தார்.

மஹேல ஜயவர்தன பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக பங்களிப்பு வழங்கியுள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் ...