Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில்

RADIOTAMIZHA | எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் காலப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் ஏதேனும் ஓர் வழியில் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சதொச உள்ளிட்ட நிறுவனங்கள் ஊடாக பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக கண்டறியப்பட்ட நோயாளி யாருடன் தொடர்பு பேணியுள்ளார் என்பது குறித்து ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்படும் எனவும், இலங்கை இத்தாலியாக மாறுவதனை விரும்பாத காரணத்தினால் எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

About Radio tamizha

x

Check Also

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் ...