Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார்!

RADIOTAMIZHA | இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார்!

இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) இரவு தனது 60வது வயதில் காலமானார்.

அண்மையில் அறிவிப்புத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று மரணித்துள்ளார்.

அம்பாறை – கல்முனையை சேர்ந்த இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியரானார். தொடர்ந்து களுத்துளை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் கடைமயாற்றினார்.

நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் இவரும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அறிவிப்பாளராகிய ஜிப்ரி இலங்கை வானொலியில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம், பாஹிமின் பரவசப் பயணம், அறிவுக் களஞ்சியம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நேயர்களின் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளராக திகழ்ந்தார்.

நாடுதழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் இருந்து வந்தார். வானொலியின் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அரசியல், சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர் பல அமைப்புக்களின் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இலங்கை ருபவாஹினிக் கூட்டுத் தாபனத்திலும் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவமுள்ள இவர் பத்திரிகைத் துறையிலும் தனது பங்களிப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: