Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/03/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/03/2020

இன்று!
விகாரி வருடம், பங்குனி மாதம் 17ம் தேதி, ஷாபான் 4ம் தேதி,
30.3.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 11:34 வரை,
அதன் பின் சப்தமி திதி, ரோகிணி நட்சத்திரம் பகல் 2:10 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை மணி 6.00 முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை மணி 10.30 முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
• பொது சஷ்டி விரதம், முருகன் வழிபாடு, முகூர்த்த நாள்

மேஷம் : சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். பெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். தொழிலில் நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவது நல்லது. சீரான அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் பொருட்களை கடனாக கொடுக்க, வாங்க வேண்டாம்.

ரிஷபம் : உறவினர்களின் உதவி மனதிற்கு ஊக்கம் தரும். முக்கிய பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் சுபநிகழ்வு நடப்பதற்கான சூழல் உருவாகும்.

மிதுனம் : அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயங்களை பற்றி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அக்கறையுடன் பணிபுரிவது அவசியம். குடும்பத் தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கடகம்: புதிதாக வரும் சவால்களை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். தாராள பணவரவில் சேமிப்பீர்கள். உறவினர் மத்தியில் உங்கள் மீதான மனவருத்தம் சரியாகும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

சிம்மம் : மனதில் உற்சாகம் பிறக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

கன்னி : எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்யோசனையுடன் செயல்படுவது நன்மை தரும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் சிறு தாமதம் ஏற்படலாம். சீரான ஓய்வு உடல் நலம் மேம்பட துணை நிற்கும்.

துலாம்: பொது இடங்களில் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பணவரவை விட குடும்பத் தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணவும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கைத் தரும்.

விருச்சிகம்: நண்பரின் உதவியால் அதிக நன்மையை பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு: மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தாமதமான பணிகள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு தேவையான பண உதவி கிடைக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் நகை வாங்கும் யோகம் உண்டு.

மகரம் : சிலரது விமர்சனத்தால் மனவருத்தம் கொள்வீர்கள். சூழ்நிலை உணர்ந்து பணிபுரிவது நன்மை தரும். தொழிலில் அதிக மூலதனம் தேவைப்படும். உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவது நல்லது. பணியாளர்கள் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

கும்பம் : மாறுபட்ட சூழல் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடியை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. செலவில் சிக்கனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நன்மை அளிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.

மீனம் : அதிக மதிநுட்பத்துடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். தாராள அளவில் பணவரவு இருக்கும். வெகுநாள் வாங்க விரும்பிய பொருளை வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

செப்டம்பர் 23,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி, ஸபர் 5ம் தேதி, 23.9.2020 புதன்கிழமை, வளர்பிறை, ...