Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 29/04/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 29/04/2020

இன்று!
சார்வரி வருடம், சித்திரை மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி,
29.4.2020 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி காலை 11:41 வரை,
அதன்பின் சப்தமி திதி, புனர்பூச நட்சத்திரம் இரவு 10:24 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால்
• சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
• பொது: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், முருகன் வழிபாடு.

மேஷம்: குழப்பங்களும், வீண் கவலைகளும் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து அன்பு பெருகும். சிலருக்கு குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் இனிதே நிறைவேறும்.

ரிஷபம்: குடும்பத்தோடு உல்லாச பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு உடல் நலம் சிறப்பாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம் : முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த செயல்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து லாபம் அதிகரிக்கும். துர்கையை வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறலாம். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

சிம்மம் : மேலதிகாரியை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணத்தால் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம்.

கன்னி: குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வதால் பல வகைகளில் நன்மை ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

துலாம்: வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும். செயல்களில் அனுகூலம் உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை. பழைய நண்பர்களை சந்திப்பது ஆதாயம் தருவதாக இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

விருச்சிகம்: நீண்ட நாளாக எதிர்பார்த்த நிலுவைப் பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு மகான்களை தரிசித்து அவர்களுடைய ஆசிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். மன தைரியம் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் மனம் மாறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மகரம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும்.

கும்பம்: சிலருக்கு பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட நாளாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.

மீனம்: அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். திடீர் பயணத்தால் உடல் அசதி ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். நண்பரின் உதவி கிடைக்கும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: