Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 28/03/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 28/03/2020

இன்று!
விகாரி வருடம், பங்குனி மாதம் 15ம் தேதி, ஷாபான் 2ம் தேதி,
28.3.2020 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 10:27 வரை,
அதன் பின் பஞ்சமி திதி, பரணி நட்சத்திரம் காலை 11:28 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை மணி 6.00 முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர்
• சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
• பொது சதுர்த்தி, கார்த்திகை விரதம், விநாயகர், முருகன் வழிபாடு, கரிநாள்

மேஷம் : மன உற்சாகமுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

ரிஷபம் : உங்களின் கருத்தை சிலர் விமர்சனம் செய்வர். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம். வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம் : பணித் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நிலுவைப் பணிகளை புதிய முயற்சியால் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.

கடகம்: புதிய வாய்ப்புக்களை ஆர்வமுடன் பயன்படுத்தி நன்மை பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் இலக்கு பூர்த்தியாகும். லாப விகிதம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

சிம்மம் : பேச்சு, செயலில் நிதானத்தை பின்பற்றுவது நல்லது. சான்றோர்களின் ஆசி கிடைக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கால அவகாசம் தேவைப்படும். பணவரவு கிடைக்க தாமதமாகலாம். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கன்னி : பகைமை குணம் உள்ளவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணச்செலவில் சிக்கனம் தேவை. வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

துலாம் : புதியவர்களின் நட்பு கிடைக்கும். இளமைக்கால இனிய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள். நேர்த்தியுடன் பணிபுரிந்து தொழிலில் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி பணவருமாணம் உண்டு. பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருளை வாங்குவர்.

விருச்சிகம்: எதிர்கால வாழ்வு குறித்து நம்பிக்கை பிறக்கும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றத்தை செய்வீர்கள். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். அரசியல்வாதிகள் உயர் பதவி பெற அனுகூலம் ஏற்படும்.

தனுசு: சிலரின் விமர்சனம் வருத்தத்தை தரலாம். லட்சியங்களை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் கொள்வது நல்லது.

மகரம் : அவசரப் பணி உருவாகி சிரமம் தரலாம். தாயின் ஆறுதல் மனதில் அதிக நம்பிக்கையை தரும். தொழிலில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவை தவிர்ப்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

கும்பம் : சிந்தனை, செயலில் புதிய மாற்றத்தை பின்பற்றுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். உபரி பண வரவால் சேமிப்பீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

மீனம் : மனதில் சிறு சங்கடம் உருவாகலாம். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். அத்தியவாசிய செலவுக்கு கடன் பெறுவீர்கள். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: