Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 28/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 28/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 14ம் தேதி, துல்ஹாதா 6ம் தேதி,
28.6.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி நள்ளிரவு 12:24 வரை,
அதன்பின் நவமி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 9:01 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : பூரட்டாதி
* பொது: ராமர், சூரிய பகவான். நடராஜர் வழிபாடு.

மேஷம்: முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். பெண்களுக்கு பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாகும். வியாபாரத்தில் உள்ள பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்: எதிரிகளின் பலம் குறைவதால் பொது வாழ்வில் ஏற்பட்ட கலக்கங்கள் அகலும். வீடு மாற்றம் இருக்கும். பணியாளர்கள் ஊக்கமும், உற்சாகமும் குறையாமல் அன்றாடப் பணிகளில் ஈடுபடுவர். பெண்களுக்கு விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைப்பார்.

மிதுனம் : ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்னைகளை மூன்றாம் நபரிடம் சொல்வதை தவிர்க்கவும். உறவினர் இடையே மனஸ்தாபம் ஏற்படக்கூடும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணியிட மாற்றம் இருக்கலாம். பெண்களுக்கு நல்ல செய்தி வரும்.

கடகம்: கடந்த சில நாட்களாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வ சொத்தின் மூலம் ஆதாயம் உண்டு. தந்தை வழி உறவினரால் நன்மை கிடைக்கும். பெண்களுக்கு செயல்களில் நிதானம் தேவை. அலுவலகத்தில் உத்வேகத்துடன் செயலாற்றுவீர்கள்.

சிம்மம் : விருப்பமில்லாத இடத்திற்கு உத்தியோக மாற்றங்கள் ஏற்படக்கூடும். வியாபாரிகளின் பணத்தட்டுப்பாடு கட்டுக்குள் வரும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் பழிகளுக்கு ஆளாகியிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.

கன்னி: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். வருமானம் திருப்திகரமாகும். தாயாரின் ஆரோக்கியம் சீராவதால் மகிழ்ச்சி கொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும்.

துலாம்: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அலுவலகத்தில் வேலையைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். சண்டை சச்சரவுகளால் விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். பிள்ளைகளின் கல்வி பற்றிய முயற்சி கைகூடும்.

விருச்சிகம்: பெண்களுக்கு லேசான ஆரோக்கிய தொல்லை வரலாம். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்க்கும்போது அவர்களை பற்றி நன்கு விசாரிக்கவும். வியாபாரிகள் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பர். பூர்வ சொத்துகளில் வில்லங்கங்கள் ஏற்படலாம்.

தனுசு: தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். முக்கியச் செலவுக்காக பணம் புரட்ட முடியாமல் தவித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசு வகையில் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.

மகரம்: கடந்த சில நாட்களாக இருந்து வந்த மனஉளைச்சலும், பயங்களும் காணாமல் போகும். பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். பணியாளர்கள் உழைப்பிற்கேற்ற பலன்களை பெறுவர். நெருங்கிய நண்பரிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கும்பம்: எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். மேலதிகாரிகள் முக்கிய விவகாரங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தொழிலில் ஆரம்பித்த பணிகள் பாதியிலேயே நிற்கும் சூழல் உருவாகலாம். மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.

மீனம்: வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புகள் உருவாகும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 29/06/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 15ம் தேதி, துல்ஹாதா 7ம் தேதி, 29.6.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, நவமி திதி ...

%d bloggers like this: