Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/03/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/03/2020

இன்று!
விகாரி வருடம், பங்குனி மாதம் 14ம் தேதி, ஷாபான் 1ம் தேதி,
27.3.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 9:11 வரை,
அதன் பின் சதுர்த்தி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 9:28 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் :காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை மணி 10.30 காலை மணி 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் மணி 3.00 முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை மணி 7.30காலை மணி 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம்
• சந்திராஷ்டமம் : சித்திரை
• பொது மகாலட்சுமி வழிபாடு.

மேஷம் : உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.

ரிஷபம் : சுயகவுரவத்திற்கு குறை வராமல் நடந்து கொள்வீர்கள். தாயின் அன்பு, ஆசி பெறுவீர்கள். குடும்பத்தினர் இயன்ற அளவில் உதவுவர். தொழிலில் உருவாகிற இடையூறை உடனடியாக சரிசெய்வது நல்லது. சீரான அளவில் பணவரவு கிடைக்கும்.

மிதுனம் : எதிரியால் உருவான சிரமங்கள் அனைத்தும் குறையும். நிலுவைப் பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

கடகம்: எதிர்வரும் பணிகளை சிறப்பாக நிறைவேற்ற தகுந்த முன்னேற்பாடு செய்வீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம் : நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்திற்கான பணச்செலவு கூடும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியின் அளவை அதிகரிப்பீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் படிப்பு, விளையாட்டில் சிறந்து விளங்குவர்.

கன்னி : திறமையுடன் செயல்பட்டு நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். சீரான அளவில் பணவரவு கிடைக்கும். மாமன், மைத்துனர் உதவிகரமாக நடந்து கொள்வர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

துலாம்: செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத் தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: வெகுநாள் திட்டமிட்ட செயல் நிறைவேற நண்பரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை மேற்கொள்வீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவர்.

தனுசு: நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். உண்மை, நேர்மையை தவறாமல் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவுடன் கூடிய நன்மை கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும்.

மகரம் : செயல்களில் தகுந்த தற்காப்பு வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தரக்கூடாது. தொழில், வியாபாரத்தில் உருவாகும் குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்யவது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம் : நண்பரிடம் கலை ரசனையுடன் பேசுவீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

மீனம் : குணம் கெட்டவருக்கு உதவி செய்து பின்னர் வருத்தம் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதலாக பணிபுரிவது அவசியம். பணச்செலவில் சிக்கனத்தை பின்பற்றுவது சிரமத்தை தவிர்க்க உதவும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: