Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 11ம் தேதி, மொகரம் 7ம் தேதி,
27.8.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, நவமி திதி பகல் 1:16 வரை,
அதன்பின் தசமி திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 4:48 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம்
* சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
* பொது : குருவாயூரப்பன் வழிபாடு

மேஷம்: பதற்றமான நாள். விமா்சனங்களால் மனதில் லேசான கசப்பு ஏற்படக்கூடும். அருகில் இருப்பவா்களை அனுசரித்து செல்வது நல்லது. அன்புக்குரியவர்களால் ஏமாற்றம் ஏற்படக்கூடும். பணிச்சுமை கூடுதலாக இருக்கும்.

ரிஷபம்: களைப்பான நாள். இன்றொரு நாளில் நான்கைந்து வேலைகளை கவனிக்க வேண்டி வரும். நகைச்சுவைக்காக சொல்ல கூடிய வார்த்தைகளையும் தவறாக எடுக்க வாய்ப்பிருக்கிறது. சுமை மிகுந்த பரபரப்பு இருக்கும்.

மிதுனம் : யோகம் உண்டாகும் நாள். பிள்ளைகள் பாசமாக இருப்பார்கள். முயற்சிகள் தொடங்கப் பொருத்தமான நாளாகும். தொழிலில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் சிரமங்கள் குறையும். கனவுகள் பலிக்கும்.

கடகம்: மனம் மகிழும் நாள். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். கலைஞர்களின் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.

சிம்மம் : குதுாகலமான நாள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. பணியாளர்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். திட்டங்கள் நினைத்ததைவிட வெற்றியாக முடியும்.

கன்னி : புதிய நபர் ஒருவரால் மகிழ்ச்சி நிரம்பும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உறவினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெறும். பல விஷயங்களில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும்.

துலாம் : நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். பூமி சம்பந்தமான விஷயங்களில் சாதகமான நிலை வந்து சேரும். பணியாளர்களுக்கு மன அமைதி சற்றுக் குறையக்கூடும். தாமதப்படுத்தப்பட்டு வந்த விஷயங்களை முடிப்பீர்கள்.

விருச்சிகம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பணியாளர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபார போட்டிகள் லேசான கவலை தரும். செலவுக்கேற்ப வரவு வந்து சேரும். தேவையற்ற கற்பனைகளால் பயம் வரும்.

தனுசு: தள்ளிப்போட்ட விஷயங்கள் தடையின்றி நடைபெறும் நாள். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். தொழில் சீராக நடைபெறும். பணியாளர்களுக்கு உடன் பணியாற்றுபவர்கள் பக்கபலமாக இருப்பர். சகோதரர்களுடன் ஒத்துப்போங்கள்.

மகரம்: நல்லவர்களின் உதவி கொண்டு சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற பலன் உண்டு. காலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும். புதிய தொழிலுக்கான முயற்சிகள் பற்றி நம்பிக்கை ஏற்படும். தீயவழியில் போகவேண்டாம்.

கும்பம்: திருப்தியான நாள். தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். பணியாளர்களுக்குப் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மீனம்: வாய்ப்பு உங்களை தேடிவரும் நாள். விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். கலைஞர்கள் கவலையிலிருந்து மீளுவீர்கள். அலுவலகத்தில் காத்த பொறுமைக்குப் பலன் உண்டு. நல்ல செய்தி ஒன்றை பெறுவீர்கள்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...