Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 13ம் தேதி, துல்ஹாதா 5ம் தேதி,
27.6.2020 சனிக்கிழமை, வளர்பிறை சப்தமி திதி நள்ளிரவு 2:49 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, பூரம் நட்சத்திரம் காலை 10:33 வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த – மரண யோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : சதயம்
* பொது : பெருமாள், அனுமன் வழிபாடு.

 

மேஷம்: வியாபாரிகள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிரிந்து சென்ற நண்பர்கள் உங்களைத் தேடி சேருவார்கள். பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

ரிஷபம் : குடும்பத்தில் உள்ள பெரியோர் ஒருவரின் மூலம் உங்களின் மனக்குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பணியாளர்கள் தன்னம்பிக்கையோடு செயல்படுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

மிதுனம் : புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத வருமானம் உண்டு. பெண்களுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரிகள் லாபத்திற்காக அதிகம் உழைக்க வேண்டிவரும்.

கடகம்: குடும்பத்தினர் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வியாபாரிகள் தங்களின் சுயஉழைப்பால் முன்னேற்றம் காண்பர்.

சிம்மம்: பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். பணியாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிகப் பலன் பெறுவார்கள். பெண்கள் கணவர் வீட்டு உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத ஆர்டர்களை பெறுவீர்கள்.

கன்னி: வியாபாரத்தில் நினைத்ததை முடித்து நிம்மதி காண்பீர்கள். கணவருக்கு நண்பர்கள் மூலம் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். பெண்களின் மனக்குழப்பங்கள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். அலுவலக வேலையில் சிறிய குழப்பம் வந்து விலகும்.

துலாம்: வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும். பொதுநல சேவைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் மேன்மையும், உயர்வும் உண்டு. பெண்களுக்கு பேச்சில் கவனம் தேவை. பணவரவு அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

விருச்சிகம்: மனதில் தோன்றும் விரோத உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதால் சிக்கல் ஏற்படக்கூடும். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

தனுசு: வருமானம் திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிவரும். அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு முக்கியப் புள்ளிகளை நாடுவீர்கள்.

மகரம்: கடந்த சில நாட்களாக இருந்து வந்த மன உளைச்சல் நீங்கும். எதிர்பாராத வரவால் குடும்பத்தேவை பூர்த்தியாகும். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் கொள்வர்.

கும்பம்: பெண்களுக்கு கவலை தரும் சம்பவங்கள் நடக்கக்கூடும். கணவருக்கு எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகம் செலவாகலாம்.

மீனம்: நீண்ட நாளாக தடைப்பட்டு வந்த செயல்கள் நடைபெறுவதாற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காணலாம். அக்கம் பக்கத்தினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: