Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 26/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 26/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 12ம் தேதி, துல்ஹாதா 4ம் தேதி,
26.6.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி காலை 7:14 வரை,
அதன்பின் சஷ்டி திதி, மகம் நட்சத்திரம் காலை 11:56 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
* பொது: சஷ்டி விரதம், முருகன் வழிபாடு.

 

மேஷம்: அலுவலகத்திலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கமிஷன் வியாபாரம் நல்ல லாபம் தரும். குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் கொள்வர்.

ரிஷபம்: கடந்த காலத்தில் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்றதை எண்ணி மகிழ்வீர்கள். பணியாளர்களின் வேலைத்திறன் மேம்படும். பெண்கள் எதிர்பாலினத்தினருடன் பழகும்போது கவனம் தேவை. தொழிலில் உருவாகும் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.

மிதுனம் : உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் போது அதிக கவனம் தேவை. பூர்வ சொத்தின் மூலம் ஆதாயம் உண்டு. மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

கடகம்: உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். பூர்வ சொத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை எண்ணி பயம் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வரவு, செலவுகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.

சிம்மம் : பொதுநலப் பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். பணியாளர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். பெண்களுடைய ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் கூடுதல் லாபத்தை பெறலாம்.

கன்னி : தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் விஷயங்களில் பணிவுடன் நடப்பது நல்லது. . இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்து லாபத்தை பெருக்குவீர்கள்.

துலாம்: தந்தை வழி உறவினர்கள் மூலம் சில உதவிகளை பெறுவீர்கள். குழந்தைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கணவரின் அரவணைப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

விருச்சிகம்: தொழில் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். பெண்களுக்கு பண வரவு அதிகரிப்பதால் மனதில் இருந்த கவலைகள் மறையும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்தினரின் மனக்கசப்புக்கு ஆளாக வேண்டாம்.

தனுசு: விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் சம்பந்தமான வியாபாரிகளுக்குப் பண வரவு கூடும். பெண்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டு. மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமையும். பேச்சில் நிதானம் தேவை.

மகரம்: பணியாளர்கள் சோம்பலுக்கு இடம் தராமல் உழைத்தால் வெற்றி பெறலாம். தந்தையிடம் வீண் வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்கள் நகையை கடனாக கொடுக்கும்போது கவனம் தேவை. வியாபாரிகளுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

கும்பம் : சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். அலுவலகத்தில் யாரை பற்றியும் யாரிடமும் குறைகூற வேண்டாம். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். விவாதங்களை தவிர்த்தால் மன உளைச்சலை தடுக்கலாம்.

மீனம்: கடந்த சில நாட்களாக இருந்து வந்த சோர்வும், பயமும் தீரும். கலைஞர்களுக்கு முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பொன்னான வாய்ப்புகள் பெருகுவதால் வேலைச் சுமை அதிகரிக்கும். புதுவீடு மாறும் சூழல் உருவாகும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: