Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 25/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 25/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 11ம் தேதி, துல்ஹாதா 3ம் தேதி,
25.6.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 9:09 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் பகல் 1:04 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம்
* சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
பொது : குருவாயூரப்பன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

 

மேஷம்: அடுத்தவருக்கு செய்யும் உதவி சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம். அலுவலகத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றி பாராட்டைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும்.

ரிஷபம் : பெண்களுக்கு உடல் அசதி ஏற்படலாம். பணியாளர்களுக்கு மனதில் தேவையற்ற கவலைகள் உருவாகும். வியாபாரிகள் புதிய இனங்களில் முதலீடு செய்வர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.

மிதுனம் : அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படாதபடி பேச்சில் கவனமாக இருங்கள். கலைஞர்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெறுவர். வியாபாரிகளின் பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். பணியாளர்களின் செல்வாக்கு உயரும்.

கடகம்: வியாபாரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு இருப்பது போல் கற்பனை செய்து கொள்வர். குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும்.

சிம்மம் : அலுவலகத்தில் சகஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வராதபடி நடந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு கணவரின் குடும்பத்தினருடன் சில சண்டைகள் உண்டாகலாம். வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள்.

கன்னி: சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஏற்கனவே பேசி எடுத்த முடிவுகள் இப்போது நன்மை தரும். அலுவலகத்தில் தேவையற்ற சச்சரவுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

துலாம் : மகளுடைய சுபநிகழ்ச்சிக்கு இருந்து வந்த தடைகள் அகலும். உடன்பிறந்தவருக்கு அரசாங்க வகையில் நன்மை ஏற்படும். பெண்களுக்கு சில விஷயங்களில் பின்னடைவு ஏற்படலாம். அலுவலகத்தில் நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி காண்பீர்கள்.

விருச்சிகம் : கலைத்துறையினர் கடினமாக உழைத்து வெற்றி வாகை சூடுவார்கள். அலுவலக பணியாளர்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பர். சிலர் வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல புத்தகங்களை படித்து புது விதமான அனுபவத்தை பெறுவர்.

தனுசு : கலைத் துறையினர் சககலைஞர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பணியாளர்களுக்கு வேலையில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். பெண்கள் கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. வியாபாரிகள் எப்போதோ செய்த முயற்சி இப்போது பலன் தரும்.

மகரம் : ஆன்மிக ஈடுபாட்டால் மனநிம்மதி அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பேசும்போது நிதானம் தேவை. பெண்கள் ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி காண்பர்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கலைஞர்கள் பொறாமையால் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத வரவால் குடும்பத்தேவை பூர்த்தியாகும். பெண்கள் அடுத்தவர் கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்து பாராட்டை பெறுவர்.

மீனம்: கலைஞர்களின் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகள் சிலவற்றில் வெற்றி கிடைக்கும். பெண்கள் புதிய நண்பர்களைப் பெறுவர். பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: