Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 24/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 24/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 8ம் தேதி, மொகரம் 4ம் தேதி,
24.8.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 7:27 வரை அதன்பின்,
சப்தமி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 8:37 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
* பொது : முகூர்த்த நாள், சஷ்டி விரதம்.

மேஷம்: சந்தோஷம் நிறைந்த நாள். பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கணவர் வழி உறவினரால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்குப் பணிச்சுமையும் வருமானமும் கூடும்.

ரிஷபம்: பல நாள் ஆசை நிறைவேறும் நாள். அதிகாரிகளின் கருணை கிடைக்கும். கலைஞர்கள் சாதனை செய்து முடிப்பீர்கள். தொழில் செய்வோருக்குப் பண வரவு திருப்தி தரும். பணியாளர்களின் முயற்சியில் தடை ஏற்படக்கூடும்.

மிதுனம் : முயற்சிகள் சாதகமாக முடியும் நாள். சிறு செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த உதவி கிடைத்து அலுவலக பணியை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மகிழ்ச்சியான உரையாடல் உண்டு.

கடகம்: பிறரிடம் பேசும் போது கவனம் தேவைப்படும் நாள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று வரும் தகவல் சிறு சங்கடத்தை ஏற்படுத்தும். பணியாளர்களுக்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை.

சிம்மம் : குடும்ப ஒற்றுமை மேலோங்கும் நாள். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். காதலைச் சொல்ல இன்று உகந்த நாள் அல்ல. பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கன்னி: பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். திருமண முயற்சிகளைத் துவங்கலாம். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகள், பேரன், பேத்திகள் மூலம் செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு கையில் பணம் புரளும்.

துலாம்: நிம்மதி அடையும் நாள். முன்பு வாங்கிய கைமாற்றுத் தொகையை அடைப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் சிறு சங்கடங்களுக்கு ஆளாகி மீளுவீர்கள். உங்கள் நடுநிலை காரணமாக நல்ல பெயர் எடுப்பீர்கள்.

விருச்சிகம்: கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும் நாள். பல காலமாக அனுபவித்த கெட்ட பெயரிலிருந்து மீளுவீர்கள். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். குடும்பத்தில் தடைபட்ட நல்ல விஷயங்கள் கூடிவரும். பதவி உயர்வு வரும்.

தனுசு: குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் நாள். அரசுப்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். மனதுக்கு இனியவர்களின் சந்திப்பு நிகழும். கணவருக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

மகரம் : பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வழக்குகளில் சுமுகமான உடன்பாடு ஏற்படும். வெளிநாட்டில் உள்ள குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி உண்டு. சுறுசுறுப்பு குறையும்.

கும்பம்: இயல்பான நாள். நேற்றுத் தடைபட்ட நன்மைகள் இன்று நடைபெறும். வரவேண்டிய தொகை வசூலாகும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. கண் சம்மந்தமாக கவனம் தேவை.

மீனம்: அசதியும் மனச்சோர்வும் வரும் நாள். பணியாளர்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பேசி வம்பில் மாட்டுவதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு சுப செய்தி உண்டு. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...