Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 24/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 24/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 10ம் தேதி, துல்ஹாதா 2ம் தேதி,
24.6.2020 புதன்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி காலை 10:42 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, பூசம் நட்சத்திரம் காலை 10:17 வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்
* பொது : முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம், விநாயகர், விஷ்ணு வழிபாடு.

 

மேஷம்: தொழில், வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் கொள்வர். கலைத்துறையினருக்கு போட்டிகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக இருந்த இழுபறியான செயல்களை சிறப்பாக செய்து முடித்து பாரட்டை பெறுவர்.

ரிஷபம்: வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு வீண் அலைச்சல்கள் இருக்கும். குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்வுகளால் இதமான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் இடையே இருந்த மனக்கசப்பு மாறும்.

மிதுனம் : கலைத் துறையினர் மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். தொழில் செய்பவர்கள் சிறிய முயற்சியை முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

கடகம் : பணியாளர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கணவர் பொறுப்புடன் நடந்து கொள்வதால் பெண்கள் நிம்மதி அடைவர். வியாபாரத்தில் உள்ள பழைய கடன்கள் வசூலாகும். எதிலும் வளைந்து கொடுக்கும் தன்மையைக் கடைபிடித்து நன்மை அடைவீர்கள்.

சிம்மம் : அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திடீர் கோபம் ஏற்படலாம். வியாபாரத்தில் காணப்படும் நெருக்கடி நிலையைத் திறம்படச் சமாளிப்பீர்கள். வேலை தேடுபவர்கள் தங்களது முயற்சியை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. பண வரவு திருப்திகரமாகும்.

கன்னி: முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் சீராக அதிக மாற்றமின்றி நடக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் இதமாக பேசி அவர்களின் ஆதரவை பெறுவர். கலைத் துறையினருக்கு முன்னேற்றம் உண்டு.

துலாம் : வியாபாரத்தில் லாபம் குறைவதை தவிர்க்க இயலாது. பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. சரியான தருணத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.

விருச்சிகம் : அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் பற்றிய உங்கள் திட்டம் பலன் தரும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

தனுசு: கடந்த நாட்களில் குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி செய்திகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும்.

மகரம் : அலுவலக விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்கள் குடும்ப விஷயங்களைப் பற்றி அக்கம் பக்கத்தினருடன் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கும்பம்: பெண்களுக்கு நெருக்கடியான நிலை உண்டாகும். கணவருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். பணியாளர்களுடைய முயற்சிகள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். தியானம், பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மனஅமைதியை பெறலாம்.

மீனம்: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். பணவரவு திருப்தி தரும். பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: