Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 23/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 23/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 7ம் தேதி, மொகரம் 3ம் தேதி,
23.8.2020 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி இரவு 9:53 வரை,
அதன்பின் சஷ்டி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 10:14 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
* பொது : முகூர்த்த நாள்.

மேஷம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் நாள். பணவரவு நன்றாக இருக்கும். உண்மையான நண்பர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனை குழப்பமளிக்கும்.

ரிஷபம்: குழப்பமான நாள். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். கலைஞர்களின் சாதனை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். வியாபாரிகள் புத்திசாதுார்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். நிதி நிலை திருப்தி தரும்.

மிதுனம் : உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும் நாள். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த கவலைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் திடீர் ஆதாயம் கிடைக்கக்கூடும். பணியாளர்களுக்கு சிறு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடகம்: திறமை அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு பணியைச் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டு. சொத்து சம்பந்தமான முயற்சி கைகூடும்.

சிம்மம் : தேவையற்ற திசையில் கோபம் பாயும் நாள். தொழில் விரிவாக்கம் செய்வது பற்றிய எண்ணம் ஏற்படும். குடும்ப சுப நிகழ்ச்சிக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கும். பணிச்சுமை குறைந்து காணப்படும்.

கன்னி : நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும் நாள். உறவினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்குப் புதிய வாய்ப்புக் கிடைக்கும். பெண் பணியாளர்களின் திறமைகள் வெளிப்படும்.

துலாம்: பெருமிதம் ஏற்படும். நாள். செய்யும் முயற்சிகளில் சிறிதளவு வெற்றி கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுங்கள். கலைஞர்களுக்குப் போதுமான ஆதரவு சற்று தாமதமாகக் கிடைக்கும்.

விருச்சிகம்: அமைதியான சூழ்நிலை நிலவும் நாள். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுக் கிடைக்கும். தேவையானவற்றை நிறைவேற்றி முதலாளியின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

தனுசு : ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு. பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். வங்கிக் கடனில் ஒருபகுதியைச் செலுத்துவீர்கள்.

மகரம்: மகிழ்ச்சி கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தாமதங்களைத் தவிர்க்க இயலாது. செலவுகள் குறையும். யார்மீதும் வழக்குப்போட வேண்டாம். நியாயத்துக்குப் புரம்பான எண்ணத்தை அகற்றுங்கள்.

கும்பம்: புதிய உத்வேகத்துடன் செயல்படும் நாள். முயற்சிகள் அலைச்சலுக்கு பிறகு கூடிவரும். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சொத்து விற்பனை சம்மந்தமான பேச்சுவார்த்தைகளை இப்போது பேச வேண்டாம்.

மீனம்: விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற செலவுகள் கூடும். எதிரிகளால் சில பிரச்னைகள் உருவாகலாம். பணியாளர்கள் வேலையில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...