Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 23/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 23/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, துல்ஹாதா 1ம் தேதி,
23.6.2020 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி காலை 11:50 வரை,
அதன்பின் திரிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம் பகல் 2:20 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
* பொது: துர்கை, முருகன் வழிபாடு.

மேஷம்: விவசாயம் சார்ந்த வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த பணிகள் அனைத்தும் நல்லபடியாக முடியும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பூர்வ சொத்தின் மூலம் சில புதிய பிரச்னைகள் உருவாகலாம்.

ரிஷபம் : புதிய தொழில்கள் தொடங்க இது உகந்த நேரம். பெண்களுக்குப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் தடைகள் நீங்குவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த கடனுதவி தாமதமின்றி கிடைக்கும்.

மிதுனம் : வியாபாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அலுவலகத்தில் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பை பெறுவீர்கள். கலைத்துறையினர் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வர். பெண்களுக்குத் தொட்டது அனைத்தும் துலங்கும்.

கடகம் : உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கலைஞர்கள் தங்கள் துறையில் புதிய சாதனைகளை படைப்பர். பெண்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மனஅமைதியை பெறலாம்.

சிம்மம் : அலுவலகத்தில் சிக்கலான பிரச்னைகளுக்கு சுமூகமான முடிவை காண முற்படுவீர்கள். தொழில், வியாபாரம் நிதானமாக நடந்தாலும் லாபம் இருக்கும். பெண்களுக்கு எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டு. நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

கன்னி : பெண்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரிகள் புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் முழுக் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம் : வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் பொறுமையாக இருப்பது நல்லது. பெண்களின் பேச்சினால் குடும்பத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படலாம். அலுவலகத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்வது பலவகைகளில் நன்மை தரும்.

விருச்சிகம்: சுபநிகழ்ச்சிகள் பற்றிய ஏற்பாடுகள் நிம்மதியை தரும். குடும்பத்தில் கடந்த நாட்களில் இருந்த பதற்ற நிலை மறையும். அலுவலகத்தில் தள்ளிப்போன வேலைகள் நல்லபடியாக முடியும். கலைத்துறையினர் தங்களின் முயற்சிகளில் வெற்றி பெறுவர்.

தனுசு : பிள்ளைகளிடம் கடுமை காட்டாமல் அன்பாக பழகுவது நன்மை தரும். அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரியின் செயலால் மனவருத்தம் ஏற்படலாம். வியாபாரிகள் எதிலும் நிதானமாக செயல்படவும். புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் தேவை.

மகரம் : அலுவலகத்தில் கவனம் சிதறாமல் பணிபுரிவது நல்லது. கலைத் துறையினருக்கு நன்மை உண்டு. பெண்கள் எந்த செயலிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

கும்பம்: பலகாலம் விரும்பிய பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் அடுத்தவருக்கு உதவி செய்யபோய் பிரச்னையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிட்டும். கடந்த காலத்தில் உங்களைத் தூற்றியவர்கள் போற்றுவார்கள்.

மீனம்: பெண்கள் கடந்த கால தவறுகளை எண்ணி வருந்த வேண்டாம். வியாபாரிகள் பெரிய தொகை பற்றி வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: