Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 22/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 22/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 6ம் தேதி, மொகரம் 2ம் தேதி,
22.8.2020 சனிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி நள்ளிரவு 12:17 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 11:53 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
* பொது : விநாயகர் சதுர்த்தி, வாஸ்து காலை 7:32 – 7:59 மணி.

மேஷம்: கொடுத்த கடன் திரும்பி வரும் நாள். அக்கம் பக்கத்தினரிடையே உங்கள் மதிப்பு உயரும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் செல்லும். பணி மாறலாமா என்று சிந்திப்பீர்கள். நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம்: தாமதங்கள் ஏற்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சற்றுக் குறையும். பெண்களுக்குக் குடும்பச் செலவுகள் ஏற்படும். கடந்த நாட்களில் இருந்த சிரமங்கள் நீங்கும். பாராட்டுப் பெறுவீர்கள்.

மிதுனம் : வாக்கு வன்மையால் செயல்களை முடிக்கும் நாள். கலையுலகில் முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகுவார்கள். முயற்சிகள் பலன் தரும். பணவரவு சற்றே அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும்.

கடகம்: குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும் நாள். பணியிடத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்குத் தீர்வு காண்பீர்கள். திருமணம் கூடி வரும். கலைத்துறையினருக்குத் தாமதம் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை தீரும்.

சிம்மம் : எதிர்ப்புகள் நீங்கும் நாள். பணிகளில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கி அமைதி ஏற்படும். புத்தி சாதுார்யம் அதிகரிக்கும். பொதுநல பணிகளில் ஈடுபாடு வரும். பண விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி: பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நாள். குடும்பச் செலவுகள் குறையும். பெண்களுக்குப் புகுந்த வீட்டினரின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் உண்டு. கலைத்துறையில் அழகுணர்ச்சி அதிகரிக்கும்.

துலாம்: விறுவிறுப்பான நாள். புத்திசாலித்தனமான செயல்களால் மற்றவர்களைக் கவர்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத சிறு பணவரவு உண்டு. பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்: முக்கிய முடிவெடுக்கும் நாள். வியாபாரிகள் முன் யோசனையுடன் நடப்பது நல்லது. பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். கணவருக்கு நன்மை உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். விருப்பம் நிறைவேறும்.

தனுசு: பொருளாதார நெருக்கடிகள் குறையும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணியாளர்களுக்கு மன நிறைவு ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போகலாம்.

மகரம்: சங்கடங்கள் தீர்ந்து நிம்மதி மீளும் நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும். எந்த விஷயத்திலும் தடை தாமதங்கள் இருக்கும். நண்பர்களைச்சந்திப்பீர்கள்.

கும்பம்: மனக்குழப்பம் ஏற்படும் நாள். முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்குப் பிரச்னைகள் நீங்கும்.

மீனம்: சிறு கவலைகள் வந்து போகும் நாள். பணப்பற்றாக் குறையால் தொழிலில் சிரமம் ஏற்படும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லேசான லாபம் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சகாக்களிடமிருந்து எதிர்ப்புகள் வரக்கூடும்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...