Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 22/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 22/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 8ம் தேதி, ஷவ்வால் 29ம் தேதி,
22.6.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி பகல் 12:34 வரை,
அதன்பின் துவிதியை திதி, திருவாதிரை நட்சத்திரம் பகல் 2:20 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
* பொது: சந்திர தரிசனம், சிவன் வழிபாடு.

மேஷம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பணியாளர்களின் முயற்சி புதிய சிந்தனைகளை உருவாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் கூடுதல் லாபத்தை பெறலாம். மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.

ரிஷபம் : சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். பெட்ரோல், எரிவாயு, கட்டுமானத் துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. பெண்கள் குடும்பத் தேவையை பூர்த்தி செய்வர்.

மிதுனம் : புதிய வேலையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உறவினருடன் இருந்து வந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார். சரியான தருணத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.

கடகம்: எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். பெண்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். கலைத்துறையினர் புகழ் பெறுவர். சிறிய ஆசைகளுக்கு இடம் கொடுத்து பிரச்னையில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

சிம்மம் : வெளிநாட்டிலிருந்து பண வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு எண்ணம் ஈடேறும். அலுவலகத்தில் நிலுவைப் பணிகளை செய்து முடிப்பீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலம் சீராக இருக்கும். பெண்களுக்கு மனதில் நிம்மதி கூடும்.

கன்னி : வெளிநாட்டுத் தொடர்புள்ள உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத் தேவைக்கேற்ப எதிர்கால சிந்தனையுடன் புதிய முதலீடுகள் பற்றித் திட்டமிடுவீர்கள்.

துலாம் : அலுவலக நண்பர்களிடையே ஒற்றுமை கூடும். கணவரின் தாயாருக்கு உடல்நிலை சற்று பாதிப்படையக்கூடும். வீடு, நிலம் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் இணையதளம் மூலமாக பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வர்.

விருச்சிகம் : தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வாகன வகையில் செலவுகள் ஏற்படும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி உண்டு. வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள்.

தனுசு: பெண்களின் அவசரப் போக்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை.

மகரம்: பிள்ளைகள் பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் காரணமாக இருப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சற்று தாமதமாகும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கும்பம்: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். நெருங்கிய உறவினரின் செயலால் மகிழ்ச்சிடைவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் சற்றும் எதிர்பார்த்திராத புதிய பதவி உங்களைத் தேடி வரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.

மீனம்: பண வரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத பரிசுப் பொருட்கள் கிடைக்கும். மாணவர்கள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 29/06/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 15ம் தேதி, துல்ஹாதா 7ம் தேதி, 29.6.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, நவமி திதி ...

%d bloggers like this: