Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/03/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/03/2020

இன்று!
விகாரி வருடம், பங்குனி மாதம் 8ம் தேதி, ரஜப் 25ம் தேதி,
21.3.2020 சனிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி காலை 10:13 வரை,
அதன்பின் திரயோதசி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 9:25 வரை,
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் :காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை மணி 6.00 முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது சனி மகாபிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: நண்பரின் கவனக் குறைவான செயலை சரி செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி பலம் பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

ரிஷபம் : முக்கியப்பணி நிறைவேற உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சியடைய அதிக மூலதனம் தேவை. உறவினரின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.

மிதுனம் : மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தருவதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். பெண்கள் நகையை கடனாக கொடுக்க வேண்டாம்.

கடகம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். குடும்பத்தினரின் கனிவான ஆலோனை நல்ல மாற்றத்தை தருவதாக அமையும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதலாக பணிபுரிவீர்கள். உறவினர் வகையில் பணம் செலவு செய்ய நேரிடலாம்.

சிம்மம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். பணித் திறமையை வளர்த்து கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். உபரி வருமானம் கிடைக்கும். உறவினரிடமிருந்து சுபசெய்தி வந்து சேரும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

கன்னி : குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதல் படி செயல்படுவீர்கள். புதிய அனுகூலமான சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

துலாம்: தகுதி மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர் உங்களிடம் சிறு உதவியை எதிர்பார்த்திடுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

விருச்சிகம்: சிரமங்களை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி, விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். உணவுப் பொருளை தரம் அறிந்து உண்பது நல்லது. வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

தனுசு: உறவினர் மூலம் புதிய சொந்தங்களை அறிவீர்கள். தொழிலில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். நிலுவைப் பணம் எளிதில் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற வாய்ப்பு வரும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

மகரம் : தர்மத்தை பின்பற்றுவதால் பல வகையில் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும். பிறர் அறியும் வகையில் அதிகமாக செலவு செய்வதை தவிர்க்கவும். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும்.

கும்பம் : நண்பரிடம் முன்னர் கேட்ட உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாகும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

மீனம் : பகைமை குணம் உள்ள ஒருவர் பரிகாசத்துடன் பேசுவார். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடைய கூடுதல் காலஅவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். போக்குவரத்தில் கவன நடையை பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE      

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: