Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 5ம் தேதி, மொகரம் 1ம் தேதி,
21.8.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி நள்ளிரவு 2:40 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, உத்திரம் நட்சத்திரம் நள்ளிரவு 1:29 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
* பொது : முகூர்த்த நாள்.

 

மேஷம்: மகிழ்ச்சியான நாள். சொத்துகளால் வந்த பிரச்னை தீரும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பொருளாதார நிலை உயரும். பெற்றோரின் ஆதரவு உண்டு. நண்பர்களின் உதவி கிடைக்கும். பெண்களின் விருப்பம் நிறைவேறும்.

ரிஷபம்: வீட்டில் கலகலப்பான சூழல் உருவாகும் நாள். நேசத்துக்கு உரியவருக்காகச் சில லாபங்களை விட்டு கொடுப்பீர்கள். வியாபார வட்டாரத்தில் உங்கள் மதிப்பு கூடும். நண்பர்களிடம் வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள்.

மிதுனம் : புதிய நன்மை தொடங்கும் நாள். பெண்களுக்கு ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் கிடைப்பார். பணியிடத்தில் மேலதிகாரி வழிகாட்டுவார். பொறுமையைக் கடைப்பிடித்து எதிலும் வெல்வீர்கள்.

கடகம்: பழைய திட்டம் நிறைவேறும் நாள். புது வீட்டுக்கு மாறுவீர்கள். பணியிடத்தில் பொறுப்பு கூடும். சமீபத்திய ஆரோக்யப் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். அதிகார தோரணையுடன் இருப்பீர்கள்.

சிம்மம் : நிம்மதி மீளும் நாள். ஆர்வம் காட்டாத செயல்களில் கூட வெற்றி கிடைக்கும். மனக்கவலை தந்த அலுவலகப்பணி முடியும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் முன்னேற்றம் காண்பர்.

கன்னி: மன நிறைவடையும் நாள். உயர் பதவியில் உள்ளவர்களின் மதிப்பு உயரும். புண்ணியச் செயல்களில் மனம் செல்லும். வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கணவரால் பெருமிதம் உண்டு.

துலாம்: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் சிறிதளவு லாபம் உண்டு. மேலதிகாரி மூலம் நன்மை அடைவீர்கள். பெண்கள் அனாவசிய செலவுகளைக் குறைப்பீர்கள். கலைத்துறையினருக்குப் பாராட்டுக் கிடைக்கும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும் நாள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். பணியாளர்கள் நிம்மதியடைவர்.

தனுசு: மனச்சுமை அகலும் நாள். சக பணியாளர்களுடன் சிறு வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதரரால் உளைச்சல் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை விரைவாய் வசூலிப்பீர்கள். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

மகரம் : பணிச்சுமையால் சோர்வடையும் நாள். வதந்திகளை பரப்ப வேண்டாம். முரட்டுத்தனம் காரணமாக மற்றவர் வெறுப்புக்கு உள்ளாக வாய்ப்புண்டு. உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பர். மற்றவர்களுக்காக அல்லாடுவீர்கள்.

கும்பம்: சோர்வான நாள். எதார்த்தமான வார்த்தைகள் கூடப் பிரச்னையில் முடியக்கூடும். சகபணியாளர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காது. உறவினர்களின் உதவியை ஏற்பது நல்லது. குடும்பத்தில் செலவு கூடும்.

மீனம்: மகிழ்ச்சியான நாள். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். அலுவலகப் பணிகளை முடிப்பீர்கள். நீண்ட காலத்திட்டம் எதையும் துவங்க வேண்டாம்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...