Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 6ம் தேதி, துல்ஹாதா 29ம் தேதி,
21.7.2020 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 10:27 வரை,
அதன்பின் துவிதியை திதி, பூசம் நட்சத்திரம் இரவு 9:59 வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்
* பொது : முருகன் வழிபாடு.

 

மேஷம்: கோயில் திருப்பணிகளை செய்யும் அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களிடையே அளவோடு பழகுவது நல்லது. கலைஞர்கள் விடாமுயற்சியால் வெற்றி காண்பர். பகை பாராட்டிய சகோதரர்கள் விரும்பி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள்.

ரிஷபம்: குடும்ப வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கூடுதலாக ஒரு புதுத்தொழில் தொடங்குவர். அலுவலக வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும்.

மிதுனம் : மனதில் உற்சாகம் பிறக்கும். கலைத் துறையில் உள்ளோரின் கற்பனை விரிவடையும். பொது வாழ்வில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவர். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்ப்பை எதிர் கொள்ள தயாராவீர்கள்.

கடகம்: உங்களின் திறமை பளிச்சிடும். பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் மதிப்பு, மரியாதை கூடும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து விலகும். தாயின் ஆசியை பெறுவீர்கள்.

சிம்மம் : மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். வருமானம் வருமளவிற்குச் செலவுகளும் அதிகரிக்கும். பெண்களுக்கு உஷ்ணம் தொடர்பான உடல்நலக் கோளாறு ஏற்படலாம். மகனின் திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும்.

கன்னி: சிலரின் சந்திப்பு காரணமாக பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். மனைவி வழி உறவினரால் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடைய பிரச்னை தீரும்.

துலாம் : அலுவலகத்தில் சகஊழியர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். பிள்ளைகளின் செயலால் பெருமை அடைவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைஞர்களின் வேலைத் திறமை மதிக்கப்படும். அனைவருடனும் சுமூகமாகப் பழகுவீர்கள்.

விருச்சிகம்: பெண்கள் கணவரின் மனம் கவரும் விதத்தில் நடந்து கொள்வர். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் தனவரவுகள் மெல்ல மெல்ல அதிகரிக்கும். கலைஞர்கள் வீண் பயங்களை வெற்றி கொள்வர்.

தனுசு: பணியை சிறப்பாக செய்து முடித்தாலும் அதில் சிலர் குறைகாண்பர். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. அனைவருடனும் சுமூகமாகப் பழகுவீர்கள். வெளிநாடுகளில் வசிக்கும் நெருங்கிய உறவினர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வரும்.

மகரம்: அலுவலகத்தில் வீண் கவலைகள் அதிகரிக்கும். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பேச்சிலும், செயலிலும் யாரையும் புண்படுத்த வேண்டாம். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள். சுபச் செலவுகள் கூடும்.

கும்பம்: கோபத்தைக் குறைத்தால் நல்லது. நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஒற்றுமை காரணமாக உறவுகளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத திடீர் இடமாற்றங்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் மீது பாசம் பொழிவீர்கள்.

மீனம்: அரசு வகையில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். ஆடை, ஆபரணங்கள் சேரும். உடல் ஆரோக்கியம் அருமையாக இருக்கும். திடீர் பணவரவு உண்டு. பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மன அமைதியை பெறலாம்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 05/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 14ம் தேதி, 5.8.2020 புதன்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி ...