Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 28ம் தேதி,
21.6.2020 ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி பகல் 12:46 வரை,
அதன்பின் பிரதமை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் பகல் 1:52 வரை,
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது: : சூரியன், ராமர் வழிபாடு.

 

மேஷம்: பெண்கள் சிலர் ஆன்மீகப் பெரியோரின் ஆசியை பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. கணவருக்கு பொறுப்பான எண்ணங்கள் மனதை ஆட்கொள்ளும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்: அலுவலக ஊழியர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு தங்களின் கீழ்பணிபுரிபவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். எதிரிகள் மனம் மாறுவார்கள்.

மிதுனம் : வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதமாக வாய்ப்புண்டு. அலுவலகத்தில் பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையக்கூடும். கலைஞர்களுக்கு சிறு சறுக்கலுக்கு பிறகே வெற்றி கிடைக்கும்.

கடகம் : வியாபாரிகள் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். வீடு மாற முயற்சிப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் இருக்கும் மகனிடம் இருந்து சுபச்செய்தி கிடைக்கும்.

சிம்மம்: வெளிநாடுகளில் வசிக்கும் உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். உடன்பிறந்தவரின் மூலம் தேவையான உதவியை பெறுவீர்கள்.

கன்னி : பணியாளர்கள் கவனச் சிதறலை தவிர்க்கவும். தொழிலில் புதிய அணுகுமுறையை பின்பற்றுவதால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு பேச்சில் எச்சரிக்கை தேவை. உடல் நிலையில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் அதற்கு மருத்துவ சிகிச்சை எடுப்பது நல்லது.

துலாம் : வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலைத் தவிர்க்க வேண்டும். விருந்து, விசேஷங்கள், உறவினர் சந்திப்பு, பிரயாணங்கள் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் கைக்கெட்டாமல் போகக்கூடும். அலுவலக வேலைகளில் தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.

விருச்சிகம் : வாகனத்தின் பராமரிப்பு செலவு கூடும். சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் சிறிய தடைகள் ஏற்படலாம். பிரிந்து சென்ற நண்பர்களை எண்ணி வருந்த வேண்டாம். கலைஞர்களின் முயற்சிகள் காலதாமதமாக வாய்ப்புள்ளதால் பொறுமையாக இருப்பது நல்லது.

தனுசு: வாழ்வில் முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். உங்களால் குடும்பத்தினருக்கு நன்மைகள் விளையும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பர்.

மகரம் : சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசி லாபத்தை பெருக்குவீர்கள். பெண்களுக்கு ஆடம்பரச் செலவால் சேமிப்பு குறையும்.

கும்பம்: மனதில் ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான முயற்சிகளில் இப்போதைக்கு பெரிய முன்னேற்றம் ஏதும் இருக்காது. புதிய வேலையை தேடுபவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.

மீனம்: நண்பர்களுக்கு உதவி செய்து பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் சகபணியாளர்களால் மனஅழுத்தம் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் நன்றாகவே இருக்கும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: