Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 20/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 20/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 5ம் தேதி, துல்ஹாதா 28ம் தேதி,
20.7.2020 திங்கட்கிழமை, அமாவாசை திதி இரவு 11:36 வரை,
அதன்பின் பிரதமை திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 10:20 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
* பொது : ஆடி அமாவாசை

 

மேஷம்: எதிர்பார்த்த செயல்கள் கைகூடி வர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும் கணவன் மனைவி உறவில் நெருக்கம் கூடும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். மேலதிகாரியிடம் உங்களின் திறமைகளை நிரூபித்து காட்டுவீர்கள்.

ரிஷபம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பீர்கள். குடும்பச் செலவுகள் கூடுதலாக இருக்கும். பூர்வ சொத்துக்களை விற்கும் முயற்சிகளில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கும்.

மிதுனம் : உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சிறு தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. உறவினர்களால் அலைச்சலும், செலவினங்களும் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்: அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும். உங்களைப் பற்றி தவறாக யார் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தள்ளிப் போடுவீர்கள். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.

சிம்மம் : தொழிலில் முன்னேற நிறைய வாய்ப்புகள் தேடிவரும். தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வ சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். மகளிடமிருந்து இனிக்கும் செய்தி வரும்.

கன்னி : வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய கோணத்தில் அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மேலதிகாரியின் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகரிப்பதால் கடனில் ஒரு பகுதியை செலுத்தும் வாய்ப்பு உருவாகும்.

துலாம் : வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைப்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெண்களுக்கு கோயிலிக்கு சென்றால் மனநிம்மதி கிடைக்கும் என்ற எண்ணம் உருவாகும்.

விருச்சிகம்: நீண்ட நாள் கவலைகள் திடீரென்று தீரும். உத்யோகத்தில் எதிர்பாராத வகையில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணப் பொறுப்புகளை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொழில் ரீதியாக வெளியூர் செல்ல நேரிடலாம்.

தனுசு: குடும்பத்தில் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். அதிகாரிகள் உங்கள் நன்மைக்காக சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

மகரம் : வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள் பெண்களுக்கு பணப் பிரச்னைகள் நீங்கும். கலைஞர்களின் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

கும்பம்: தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிப்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். தொழில் வளர்ச்சியை பெருக்கிக் கொள்ள புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் மனநிம்மதி அடைவீர்கள்.

மீனம்: தொழில் செய்பவர்களுக்கு சற்று பொருளாதார பற்றாக்குறை நேரக்கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பெண்கள் ஆடைகளை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி கொள்வர். கலைஞர்கள் எதிர்ப்புகளைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவர்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 05/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 14ம் தேதி, 5.8.2020 புதன்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி ...