Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 20/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 20/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 6ம் தேதி, ஷவ்வால் 27ம் தேதி,
20.6.2020 சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12:34 வரை,
அதன்பின் அமாவாசை திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 12:54 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
* பொது: அமாவாசை விரதம், பெருமாள், சனீஸ்வரர் வழிபாடு, கரிநாள்

 

மேஷம்: வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உயரும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

ரிஷபம் : பெண்கள் கணவர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். அலுவலகத்தில் மனதிற்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகள் நடக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சிகள் தள்ளி போகலாம். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக அமையும்.

மிதுனம் : பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை இருக்கும். பணவிஷயத்தில் உறவினர்கள் உதவுவார்கள். தந்தைக்கு செரிமானம் சம்பந்தமான பிரச்னைகள் வந்து உடனே சரியாகும். வியாபாரிகளுக்கு முதலீட்டில் கவனம் தேவை. பணியாளர்கள் அதிகம் உழைக்க வேண்டும்.

மிதுனம் : பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை இருக்கும். பணவிஷயத்தில் உறவினர்கள் உதவுவார்கள். தந்தைக்கு செரிமானம் சம்பந்தமான பிரச்னைகள் வந்து உடனே சரியாகும். வியாபாரிகளுக்கு முதலீட்டில் கவனம் தேவை. பணியாளர்கள் அதிகம் உழைக்க வேண்டும்.

கடகம்: தொழிலில் சிறிய அளவிலான புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் குறைந்த அளவு லாபம் தரும். பெண்களுக்கு அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சிம்மம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். பெண்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். அலுவலக நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பணவரவு இருக்கும்.

கன்னி : குடும்பத்தில் குதுாகலம் நிறைந்திருக்கும். உடன்பிறந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பல மாதங்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வை பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

துலாம் : கடந்த நாட்களி்ல் இருந்த மன உளைச்சல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். பூர்வ சொத்துக்களால் எதிர்பார்த்த ஆதாயம் இப்போதைக்கு இல்லை. பெண்களுக்கு நரம்பு சம்பந்தமான உபாதைகள் சரியாகும். கொடுக்கல், வாங்கல் சுமாராகவே இருக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளுடைய பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு: பூர்வ சொத்துக்களை ஒரு வழியாக விற்பதால் சற்று பணப்பிரச்னை குறையும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் பற்றிய தகவல் வரும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

மகரம் : வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்னைகள் சுமூகமாக முடியும். உறவினர்களால் பண விஷயத்தில் நன்மை உண்டு. அலுவலகத்தில் நண்பர்களிடம் வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். எதிர்பார்த்த உதவி தாமதமாகவே கிடைக்கும்.

கும்பம் : தொழில் ரீதியாகப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் சிறிய அளவில் தடைகள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வ சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்: நண்பர்களுக்கு உதவுவதற்காக சில தவறுகளை செய்து பிரச்னையில் மாட்டிக் கொள்ளதீர்கள். பெண்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருக்கும். உங்களின் கடின உழைப்பை நிர்வாகம் புரிந்து கொள்ளும். சொந்த தொழில் செய்பவர்கள் வெற்றி காண்பர்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: