Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 19/03/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 19/03/2020

இன்று!
விகாரி வருடம், பங்குனி மாதம் 6ம் தேதி, ரஜப் 23ம் தேதி,
19.3.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, தசமி திதி காலை 8:34 வரை,
அதன் பின் ஏகாதசி திதி, உத்திராடம் நட்சத்திரம் மாலை 6:15 வரை,
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 10:30-12:00 மணி
ராகு காலம்: பகல் 1:30-3:00 மணி
எமகண்டம்: காலை 6:00-7:30 மணி
குளிகை: காலை 9:00-10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது: தட்சிணாமூர்த்தி வழிபாடு, கரிநாள்

 

மேஷம்: தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பெண்கள் பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருளை வாங்கித்தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவர்.

ரிஷபம்: குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு பணிகளை நேர்த்தியாக செய்து கூடுதல் நன்மையை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கியச் செலவுகளுக்கு பயன்படும்.

மிதுனம்: பிறர் செயலில் குற்றம் காண வேண்டாம். ஆரவாரத்தை தவிர்ப்பதால் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரவை விட செலவு கூடும். உடல்நலனில் அக்கறை கொள்வது நன்மை தரும்.

கடகம்: இடையூறாக செயல்பட்டவர் விலகிப் போவார். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட அபரிமிதமான முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் உழைப்பால் சலுகை பெறுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

சிம்மம்: முன்பு பெற்ற உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபார நடைமுறையில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்கி மகிழ்வர்.

கன்னி: உங்களின் பொறுப்பான செயல் விமர்சிக்கப்படலாம். சகதொழில் சார்ந்தவர்களுடன் சச்சரவு பேச வேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

துலாம்: இஷ்ட தெய்வத்தின் அருளை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை இருக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வது நல்லது. உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

விருச்சிகம்: நல்ல செயலுக்கு உரிய பலன் தேடி வரும். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

தனுசு: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். நிர்ப்பந்தத்தின் பேரில் பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.

மகரம்: குடும்பத்தினர் அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனம் விரும்பிய வகையில் சுபச்செலவுகளை செய்து மகிழ்வீர்கள்.

கும்பம்: இடையூறு செய்பவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை ஏற்படலாம். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுவது நல்லது. பிள்ளைகளின் நற்செயல் மனதிற்கு ஆறுதல் தரும்.

மீனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: