Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 19/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 19/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 3ம் தேதி, துல்ஹஜ் 28ம் தேதி,
19.8.2020 புதன்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி காலை 8:45 வரை,
அதன்பின் பிரதமை திதி, மகம் நட்சத்திரம் அதிகாலை 4:17 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : திருவோணம்.
* பொது : விஷ்ணு வழிபாடு.

 

மேஷம்: திருப்பங்கள் நிறைந்த நாள். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.

ரிஷபம்: நல்லது நடக்கும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களை மேலதிகாரிகள் ஆதரிப்பர். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிம்மதியாக முடிவுக்கு வரும். பொதுநல சேவை செய்வீர்கள்.

மிதுனம் : சாதகமான சூழ்நிலை ஏற்படும் நாள். எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள் பயணங்கள் தள்ளிப்போகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்ததை விடக் குறைவான பாராட்டுக் கிடைக்கும்.

கடகம்: தேவைகள் நிறைவடையும் நாள். சக பணியாளர்களால் இழந்திருந்த நிம்மதி மீளும். அழகும் இளமையும் அதிகரிக்கும். நிதி விவகாரங்களில் இருந்த அதிருப்தியான நிலை சற்றே மாறும். வியாபாரத்தில் தேக்க நிலை தீரும்.

சிம்மம் : புதிய முன்னேற்றங்களை அடையும் நாள். வேலை தேடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் புலப்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நிறைவேறும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வரும்.

கன்னி: பயம் தீரும் நாள். மருத்துவ சிகிச்சை சாதகமன பலனைத் தரும். எதிர்பாலினத்தினரால் இருந்து வந்த தொல்லைகள் தீரும். குடும்பத்தில் பகை மாறி பாசம் கூடும். வரவு திருப்தி தரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்: எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் நாள். விசா தொடர்பான பிரச்னைகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். அதிக நேர விரயம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும். பழைய விஷயங்களை அசைபோடுவீர்கள்.

விருச்சிகம் : மன உறுதியுடன் செயல்படும் நாள். மருத்துவ செலவுகள் குறைந்து நிம்மதி கூடும். வியாபாரிகள் முயற்சிகளை இன்று துவக்கலாம். நேற்று சண்டையிட்டவர் இன்று மாறுவர். காதல் விவகாரங்களில் கவனம் தேவை.

தனுசு: பிரச்னைகள் தீரும் நாள். ஒரு பெண் ஆதரவாகச் செயல்படுவார். குடும்ப நிலைமைகள் மேம்படும். நல்ல செய்திகள் வரும். ஒரு சிலரிடம் மாற்றத்தைப் பற்றி வியப்பீர்கள். வரவறிந்து செலவு செய்வீர்கள்.

மகரம்: மன குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். சிலர் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பர். மருத்துவச் செலவு அதிகரிக்கும். வழக்குத் தொடுக்க வேண்டாம். பணியாளர்கள் முழு கவனத்துடன் செயல்படுங்கள்.

கும்பம்: இனிமையான நாள். சக பணியாளருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நன்மை கூடும்.

மீனம்: மனதில் அமைதி தவழும் நாள். கணவருக்கு முன்னேற்றமான சூழல் தெரியும். உடல் நிலை பற்றிய பயம் குறையும். குழந்தைகளின் நலன் நிம்மதியளிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுது கழியும்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...