Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 18/03/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 18/03/2020

இன்று!
விகாரி வருடம், பங்குனி மாதம் 5ம் தேதி, ரஜப் 22ம் தேதி,
18.3.2020 புதன்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 8:29 வரை,
அதன் பின் தசமி திதி, பூராடம் நட்சத்திரம் மாலை 5:21 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: பகல் 12:00-1:30 மணி
எமகண்டம்: காலை 7:30-9:00 மணி
குளிகை: காலை 10:30-12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது அனுமன் வழிபாடு.

 

மேஷம்: சுயகவுரவத்திற்கு சிறு சோதனை வரலாம். தொழில், வியாபார நடைமுறை செழிக்க கூடுதல் முயற்சியுடன் கூடிய உழைப்பும் அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். சொத்து, ஆவணத்தை பிறர் பொறுப்பில் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.

ரிஷபம்: சிறிய பணிகளுக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபார நடைமுறையில் அவப்பெயர் ஏற்படாதவாறு செயல்படுவீர்கள். முக்கியச் செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுவது நல்லது.

மிதுனம்: பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் முன்னேற்றம் உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

கடகம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். தாயின் அன்பு, ஆசி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள்.

சிம்மம்: உறவினரின் பாசம் வியப்பைத் தரலாம். தொழில், வியாபாரத்தில் உருவாகும் சிரமங்களை கவனமுடன் சரிசெய்வது நல்லது. புதிய முயற்சியால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி: பேச்சில் நிதானம் தேவை. தொழில், வியாபார நடைமுறையில் உள்ள குளறுபடி சரியாகும். பணம் வசூலிக்க இதமான அணுகுமுறையை பின்பற்றுவது நன்மை தரும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். ஒவ்வாத உணவை தவிர்ப்பது நல்லது.

துலாம்: முக்கியமான செயலை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினரிடம் உங்ளின் மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமை குறையும். உபரி பணவருமானம் கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: கூடுதல் வேலைப்பளு ஏற்படுவதற்கான சூழல் உருவாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூல நடைமுறையை பிறரிடம் சொல்லவதை தவிர்ப்பது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்க உதவும்.

தனுசு: அதிக மதிநுட்பத்துடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலக்காரணி பலம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். தாராள பணவரவில் குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

மகரம்: சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தாமதம் செய்வர். தொழில், வியாபார நடைமுறை சீரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப் பொருளை தரமறிந்து உண்பது நல்லது. தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.

கும்பம்: செயல்களில் முன்யோசனை குணம் நிறைந்திருக்கும். சமூக அக்கறையுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும். உபரி பணவரவு உண்டு. இயலாதவருக்கு இயன்ற உதவியை வழங்குவீர்கள்.

மீனம்: அதிக நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்குரிய பலன் முழுமையாக கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் கூடுதல் அந்தஸ்தை பெறுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப் பொருளை வாங்குவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல்   [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE  

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: