Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 18/02/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 18/02/2020

இன்று!
விகாரி வருடம், மாசி மாதம் 6ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 23ம் தேதி,
18.2.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, தசமி திதி மாலை 6:33 வரை,
அதன் பின் ஏகாதசி திதி, கேட்டை நட்சத்திரம் காலை 9:18 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: பகல் 3:00-4:30 மணி
எமகண்டம்: காலை 9:00-10:30 மணி
குளிகை: பகல் 12:00-1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது துர்கை வழிபாடு.

 

மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை காணப்படும். அவசர தேவைகளுக்கு கடன் பெறுவீர்கள். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்: திறமையை வளர்த்துக் கொள்வதால் பல நன்மை பெறலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்ப தேவைகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். நண்பர்களுடன் இனிய சந்திப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்: மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சி புதிய இலக்கை எட்டும். உபரி பணவரவு கிடைக்கும். நண்பர்கள் முன்பு கேட்ட உதவியை சரியான தருணத்தில் வழங்குவீர்கள்.

கடகம்: மனதில் பலநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். தியானம் மனஅமைதியை தரும்.

சிம்மம்: எதிர்மறையான சூழல்களில் விலகுவதால் நன்மை பெறலாம். தொழில், வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றம் பெறும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். தரம் குறைந்த பொருட்களை அதிக விலைக்கு வாங்க நேரிடலாம். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

கன்னி: செயல்களில் பாதுகாப்பை பின்பற்றினால் மிகுந்த நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் இருக்கும்.

துலாம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். விருந்து, விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்: அளவான பேச்சுால் சுயகவுரவத்தை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கு பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர்.

தனுசு: உலக நடப்புகளை அறிவதில் ஆர்வம் கொள்வீர். இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் உற்பத்தி, வியாபாரம் செழிக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் சொத்து வாங்க திட்டமிடுவீர்கள். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

மகரம்: குடும்பத்தினரின் ஆலோசனையால் நல்வழியில் நடப்பீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி அடைய கூடுதல் கவனம் தேவை. பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம்பெறும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கும்பம்: திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவுடன் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். தரும செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்: நீண்டநாள் எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணியை செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மாணவர்கள் கவனமுடன் படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/03/2020

இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 14ம் தேதி, ஷாபான் 1ம் தேதி, 27.3.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி ...

%d bloggers like this: