Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 18/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 18/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 2ம் தேதி, துல்ஹஜ் 27ம் தேதி,
18.8.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி காலை 10:19 வரை,
அதன்பின் அமாவாசை திதி, ஆயில்யம் நட்சத்திரம் அதிகாலை 5:13 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : உத்திராடம்
* பொது : அமாவாசை, கரிநாள்

 

மேஷம்: அறிவுப் பூர்வமாக செயல்படும் நாள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தை இடம் மாற்றுவீர்கள். பணியாளர்களின் மரியாதை கூடும். முயற்சிகள் கைகூடும்.

ரிஷபம்: மன மகிழ்ச்சி கூடும் நாள். உடல்நலம் மேம்படும். பணியில் கவனச்சிதறல் ஏற்படக்கூடும். பணியிடத்தில் சில தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். பெண்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

மிதுனம் : உற்சாகமடையும் நாள். பிறருக்காக கடினமாக உழைக்க வேண்டி வரும். குடும்ப மகிழ்ச்சி நிலைக்கும். பிரச்னைகளுக்குப் புதிய வகைத் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் நன்மை உண்டு. வழிபாட்டு நம்பிக்கை கூடும்.

கடகம்: நிம்மதி மீளும் நாள். வாக்குவாதங்கள் குறையும். எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். நண்பர்களை நம்பியது வீண்போகாது. பணியாளர்களின் வேலைச்சுமை குறையும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்பு வரும்.

சிம்மம் : ஏற்றம் பெறும் நாள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். எழுத்தாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். மனக்கவலையிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னி: அமைதியான நாள். வேலையாட்களின் ஒத்துழைப்பால் தொழில் செழிக்கும். சகாக்கள் ஒத்துழைப்பார்கள். பணியாளர்கள் நிம்மதி காண்பீர்கள். பெண்களால் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நிறைவேறும். பழைய நினைவுகள் ஏற்படும்.

துலாம்: பரபரப்பான நாள். எதிரிகளைப் பக்குவமாகச் சமாளிப்பீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். பொது நலத்தில் ஆர்வம் கூடும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். வழக்குகள் திசை திரும்பக்கூடும்.

விருச்சிகம்: குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பணியாளர்களின் நேற்றைய பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். நல்ல செய்தி ஒன்று வரும்.

தனுசு: மன அமைதி குறையும் நாள். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து பயம் வரும். என்றைக்கோ பேசியவற்றால் இன்றைக்குத் தொல்லைக்கு ஆளாகக்கூடும்.

மகரம்: கவலை தரும் நாள். நிதி விவகாரங்களில் கவனம் தேவை. மன அமைதிக்கு தியானம் செய்யவும். பணியாளர்கள் யாரிடமும் குரல் உயர்த்தி வாதிட வேண்டாம். கலைஞர்கள் காத்திருக்க வேண்டிவரும்.

கும்பம்: சுபச்செய்தி வரும் நாள். உங்களைப் பற்றிப் பெருமையடையும் செய்தி வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுக்குச் சற்று காத்திருக்கவும். தன வரவு உண்டு. புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும் நாள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். பெண்களுக்குத் திட்டங்கள் நிறைவேறும். கலைஞர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நன்மை காண்பீர்கள்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...