Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 18/06/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 18/06/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 4ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி,
18.6.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி காலை 10:28 வரை,
அதன்பின் திரயோதசி திதி, பரணி நட்சத்திரம் காலை 9:34 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம்
* சந்திராஷ்டமம் : சுவாதி
* பொது: பிரதோஷம், கார்த்திகை விரதம், சிவன், முருகன் வழிபாடு.

 

மேஷம்: உறவினர், நண்பர்களால் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மேலதிகாரிகள் உணர்வார்கள். பெண்களின் முயற்சிக்கு உடன்பிறந்தவர்கள் உதவுவர்.

ரிஷபம்: பொதுநல சேவையில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வழியில் செலவுகள் கூடும். மகளுக்கு எதிர்பார்த்த வரன் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுவது நல்லது.

மிதுனம் : பிள்ளைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டு. தாயாருக்கு எலும்பு தேய்மானத்தால் உடல்நிலை பாதிக்கப்படலாம். உத்யோக நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும். வியாபாரிகள் திட்டமிட்ட செயல்கள் தாமதமாவதால் கவலை கொள்வர்.

கடகம்: பெண்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். அலுவலகத்தில் சகஊழியளர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

சிம்மம் : கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோர் உடல் நலனில் கவனம் தேவை. வீடு மாற எடுக்கும் முயற்சியில் பலன் உண்டு. அலுவலக நண்பர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். வியாபாரிகளுக்கு கூடுதல் செலவுகள் இருக்கும்.

கன்னி : வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு பின் சரியாகும். வியாபாரிகள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். அரசு சம்பந்தபட்ட விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். அலுவலகத்தில் இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதால் நிம்மதி அடைவீர்கள்.

துலாம்: வியாபாரிகளுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த மன உளைச்சல்கள் தீரும். அலுவலகத்தில் உள்ள நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். கலைத்துறையினர் வெற்றி காண்பர். நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைத் தாமதமாக நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் : மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும். தொழிலில் புதிய இனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ரிஸ்க்கை எடுக்காதீர்கள். சகோதரியின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்வீர்கள். சரியான தருணத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.

தனுசு : அலுவலக நிதியில் பற்றாக்குறை இருந்தாலும் அதைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சமாளிக்கக்கூடிய அளவு பொருளாதாரப் பிரச்னைகள் வரும். சகோதரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகரம் : பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. கணவருக்கு பூர்வ சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவடைவதற்கு சிறிதளவு காலதாமதமாகும். பணியிட மாற்றம் குறித்து யோசிப்பீர்கள். பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மனஅமைதியை பெறலாம்.

கும்பம்: தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். பயணங்கள் தள்ளிப்போவதால் நன்மை விளையும். அரசு ஊழியர்களுக்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் நீண்ட நாளாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்: வியாபாரத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பல காலம் தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அலுவலகத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் நன்மையடைவீர்கள். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: