Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 17/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 17/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆவணி மாதம் 1ம் தேதி, துல்ஹஜ் 26ம் தேதி,
17.8.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி காலை 11:23 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:09 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : பூராடம்
* பொது : மாத சிவராத்திரி

மேஷம்: மனநிறைவளிக்கும் நாள். சேவைகள் செய்தல் திருப்தி தரும். மூத்தவர்கள் ஆதரவால் நன்மைகள் நடக்கும். பணியாளர்களின் தன்னம்பிக்கை கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அமைதியாக செயல்படுவீர்கள்.

ரிஷபம்: பரபரப்பான நாள். பெரியோர்களின் ஆசி பெறுவீர்கள். குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணியிட மாற்றம் உறுதியாகலாம். திட்டம் ஒன்று செயல்வடிவம் பெறும்.

மிதுனம் : பரவசப்படுத்தும் நாள். பெண்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நல்ல முடிவிற்கு வரும். தடைகள் ஏற்பட்டாலும் விலகும். நீங்கள் தெளிவாக இருந்தாலும், சுற்றியிருப்பவர்கள் குழப்புவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு.

கடகம்: சுவாரஸ்யமான நாள். புதிய வேலைவாய்ப்பு பற்றி நல்ல செய்தி வரும். புதிய தொழில் முயற்சி பற்றி ஆர்வம் ஏற்படும். பெண்களுக்குக் குதுாகலமான சம்பவம் நடக்கும். நண்பர்களால் சிறு வருத்தம் தோன்றி மறையும்.

சிம்மம் : நினைத்தது நிறைவேறும் நாள். முன்பு செய்த முயற்சி இன்று வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பணியாளர்களின் எண்ணம் செயல்வடிவம் பெறும்.

கன்னி: நினைத்து மகிழக்கூடிய நாள். பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னை அகலும். முயன்ற விஷயங்களில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வரும்.

துலாம்: நிம்மதியான நாள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கான முயற்சிகள் நல்ல முறையில் முடியும்.

விருச்சிகம்: கவலைகள் தீரும் நாள். எடுக்கும் முயற்சிகளை யோசித்துச் செயல்படுத்துவது நல்லது. கடன் முயற்சிகள் காலதாமதம் ஏற்படக்கூடும். நண்பர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.

தனுசு: எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். எதிர்பாராத திருப்பங்கள் வந்து சேரும். கவனக்குறைவால் சில பொருட்கள் விரயமாகலாம். பழி தரக்கூடிய விஷயங்களைத் தவிருங்கள். கணவரின் கோபம் வருத்தம் தரும்.

மகரம்: குதுாகலமான நாள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். பணியாளர்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

கும்பம்: விருப்பம் ஒன்று நிறைவேறும் நாள். தாயாரின் ஆரோக்கியத்தில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு சரியாகும். காத்திருந்த தொகை கிடைக்கும். பணியாளர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். நல்லவர்களின் நட்புக் கிடைக்கும்.

மீனம்: சாதகமான நாள். சுபச்செலவுகள் உண்டாகும் அறிகுறி தெரியும். பிள்ளைகளால் பெருமை சேரும். கொடுத்த கடன் திரும்ப வரும். மன வலு கூடும். ஒருசில பணியாளர்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...