Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 16/03/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 16/03/2020

இன்று!
விகாரி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி, ரஜப் 20ம் தேதி,
16.3.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 9:51 வரை,
அதன் பின் அஷ்டமி திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 5:07 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 6:00-7:30 மணி
ராகு காலம்: காலை 7:30-9:00 மணி
எமகண்டம்: காலை 10:30-12:00 மணி
குளிகை: பகல் 1:30-3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது சிவன், பைரவர் வழிபாடு.

 

மேஷம்: பணிகள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். பணவரவை அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.

ரிஷபம்: சோதனைகளை வெல்ல மதிநுட்பத்துடன் பணிபுரிவீர்கள். தாயின் அன்பு, ஆசி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். அதிக பணவரவில் சேமிப்பீர்கள். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்: முன்னர் செய்த நற்செயலுக்கான நன்மை தேடிவரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விலகிய சுற்றத்தார்கள் விரும்பி வந்து அன்பு பாராட்டுவர்.

கடகம்: பெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். சீரான அளவில் பணவரவுடன் நன்மையும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

சிம்மம்: எதிர்வரும் சிரமங்களை எளிதாக சரிசெய்வீர்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். உபரி பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது.

கன்னி: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னர் செய்த அபிவிருத்தி பணி நல்ல பலனை கொடுக்கும். பணவரவு திருப்திகரமாகும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

துலாம்: எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தரவேண்டாம். செயல்களில் நிதானம் தேவை. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியச் செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பை பின்பற்ற வேண்டும்.

விருச்சிகம்: மனதில் பெருமிதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சியை கண்டு பிறர் வியப்படைவர். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

தனுசு: உங்கள் செயலை சிலர் விமர்சிப்பர். நம்பிக்கையுடன் செயல்பட்டால் உரிய நற்பலனை பெற முடியும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருளை கடனாக கொடுக்க, வாங்க வேண்டாம்.

மகரம்: எதிலும் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டுத் தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

கும்பம்: திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பு, விளையாட்டில் சிறந்து விளங்குவர்.

மீனம்: அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். தொழிலில் உருவாகும் இடையூறை சரிசெய்வதால் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல்   [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE  

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: