Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 16/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 16/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 32ம் தேதி, துல்ஹஜ் 25ம் தேதி,
16.8.2020 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி பகல் 12:01 வரை,
அதன்பின் திரயோதசி திதி, புனர்பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : மூலம்
* பொது : பிரதோஷம்

மேஷம்: அதிர்ஷ்டமான நாள். சுப நிகழ்ச்சிக்கான முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் தொடர்பான செயல்களில் முன்னேற்றம் உண்டு. பொருளாதாரத்தில் பின்னடைவு தீரும். உடன்பிறந்தோர் மூலம் உதவி கிடைக்கும்.

ரிஷபம்: ஆரோக்யமான நாள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். பணியிடத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு பண விவகாரத்தில் நிதானமாக இருக்கவும்.

மிதுனம் : மனநிறைவான நாள். உடல் நலம் மேம்படும். பேச்சுவார்த்தையில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாகஇருந்த டென்ஷன் நீங்கும். பணியிடத்தில் கடமைகள் சரியாக முடியும்.

கடகம்: திருப்தியான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகப் பிரச்னைகளுக்குப் புதிய அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

சிம்மம் : வெற்றிகரமான நாள். அலுவலகப் பணியில் திருப்தி உண்டாகும். புது விஷயம் ஒன்றைத் தொடங்குவீர்கள். கொஞ்சம் அலைச்சல் இருக்கும். காதலர்களுக்கு மனநிறைவு ஏற்படும். சிறு ஏமாற்றம் வந்து நீங்கும்.

கன்னி: மனதுக்கு இனிய நாள். பழைய சம்பவங்களை நினைவுபடுத்தும் நபர் ஒருவரைச் சந்திப்பீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய இயலாது. எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது. சமீபத்திய டென்ஷன் தீரும்.

துலாம் : நல்ல நாள். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களின் பலம், பலவீனத்தைக் கண்டறிவீர்கள். பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளின் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். கடந்த நாட்களின் தோல்விகள் மாறும். ஒரு சிலருக்கு வீண் அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு மற்றவர்களைத் தொடர்ந்து சிரமப்படுத்த வேண்டாம்.

தனுசு: கவனமாயிருக்க வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்களும் உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. எதையும் நிதானமாகச் சிந்தித்து செய்ய வேண்டும். வியாபாரத்தில் தடை வரும்.

மகரம்: திறமைகள் வெளிப்படும் நாள். சக பணியாளர்களால் ஆதாயமுண்டு. உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு. தடைகள் தாமதங்களைத் தவிர்க்க இயலாது.

கும்பம்: லாபமான நாள். அரசாங்க உதவி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உயர் நிலையில் உள்ளவர்கள் அறிமுகம் ஆவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. ஏமாற்றங்கள் தீரும்.

மீனம்: நினைத்தது நிறைவேறும் நாள். பயணங்களுக்கு முன்பு சிந்திப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நல்ல முடிவை எட்டுவீர்கள். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...