Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 15/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 15/08/2020

ஆகஸ்ட் 15,2020
இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 31ம் தேதி, துல்ஹஜ் 24ம் தேதி,
15.8.2020 சனிக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி பகல் 12:09 வரை,
அதன்பின் துவாதசி திதி, திருவாதிரை நட்சத்திரம் அதிகாலை 5:58 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : கேட்டை
* பொது : ஏகாதசி விரதம்

 

மேஷம்: குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். திடீர்ப் பணவரவு மகிழ்ச்சி தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை நன்மை பெறுவார்.

ரிஷபம்: அமைதியான நாள். மகிழ்ச்சி தரும் செலவு செய்வீர்கள். நண்பருடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சவாலான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினரைப் புறக்கணிக்க வேண்டாம்.

மிதுனம் : சகோதரர்களுக்காகச் செலவு செய்யும் நாள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். முயற்சிகளுக்கான வெற்றிகள் மகிழ்ச்சி தரும். தன்னம்பிக்கை கூடும். அரசு ஆதரவால் நன்மைகள் நடக்கும்.

கடகம்: சிறப்பான நாள். முயற்சிகளில் பலனடைவீர்கள். புதிய தோழியின் நட்பால் உற்சாகம் ஏற்படும். வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். சொத்துத் தகராறு செய்து கொண்டிருந்த உறவினருக்கு நன்மை செய்வதால் பகை தீரும்.

சிம்மம் : மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் துன்பம் தீரும். தனலாபம் அதிகரிக்கும். முயற்சிகளில் ஓரளவு வெற்றி கிட்டும். குழந்தைகளால் பெருமிதம் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்பீர்கள்.

கன்னி: உற்சாகமான நாள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தினம். மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

துலாம் : நேற்றைய சிரமங்கள் தீரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் வருத்தம் ஏற்படக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணவரவு ஏற்படும். பணியாளர்களுக்கு ஏற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்: கடுமையான நாள். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிந்து நடந்தால் அனுகூலம் பெறலாம். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். பழி ஏற்படாதபடி நடந்துகொள்ளுங்கள்.

தனுசு: நன்மைகள் நிகழும் நாள். உறவினர் உதவியால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பெண்களுக்குப் பொறுமை காரணமாக நல்ல பலன் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும்.

மகரம்: பாராட்டுப் பெறும் நாள். பயணத்தில் தடங்கல் ஏற்படும். குழந்தைகளுக்குச் சிறு உபாதை ஏற்பட வாய்ப்புண்டு. சாதனை செய்வீர்கள். வியாபாரிகள் எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பர். பழைய வேலை ஒன்றை முடிப்பீர்கள் .

கும்பம்: மன நிம்மதி குறையும் நாள். வீட்டில் பொருட்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்தால் இழப்பைத் தவிர்க்கலாம். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். இன்றைய கவலைகள் இன்றோடு தீரும்.

மீனம்: சோர்வான நாள். கணவர் நலத்தில் அக்கறை தேவை. பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து பலன் அடைவீர்கள். முக்கிய வேலைகளைத் தள்ளிப்போட வேண்டாம். நட்பு வட்டம் விரிவாகும்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

செப்டம்பர் 22,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 6ம் தேதி, ஸபர் 4ம் தேதி, 22.9.2020 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, ...