Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 14/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 14/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 30ம் தேதி, துல்ஹாதா 22ம் தேதி,
14.7.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, நவமி திதி இரவு 8:23 வரை,
அதன்பின் தசமி திதி, அசுவினி நட்சத்திரம் பகல் 2:42 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
* பொது: துர்கை வழிபாடு.

 

மேஷம்: குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வ சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உங்களைத் தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனநிலை மாறும். வியாபாரத்தில் அனுபவமிக்க அணுகு முறையால் நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம் : உத்தியோகத்தில் சவாலான வேலைகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டால் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

மிதுனம் : உறவினர் மூலமாக சிறு செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நல்லது. வியாபாரிகளுக்குத் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் தீர்மானமான கருத்துகளைச் சொல்வதால் சிலருடைய பகையை சம்பாதிப்பீர்கள்.

கடகம்: கவலையற்ற போக்குடன் இருப்பீர்கள். தொல்லைகள் சில வந்தாலும் அதை லாவகமாக அணுகி வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி கூடும். பெண்களுக்கு கணவரின் ஆதரவு அதிகரிக்கும். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள்.

சிம்மம் : கடந்த நாட்களில் இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலைபார்ப்பவர்களை மிக மரியாதையுடன் நடத்துவீர்கள். பணப்புழக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.

கன்னி: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கியை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் : உத்தியோகத்தில் சூட்சுமங்களைக் கற்க பொறுமை தேவைப்படும். எதிர்பாலினத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்: கலைத் துறையினருக்கு நிம்மதியும், சந்தோஷமும் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வர். உத்தியோகத்தில் நீண்ட நாளாக முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்த செயலைச் செய்து முடிப்பீர்கள்.

தனுசு : நண்பர்களிடையே சுமூக உறவு ஏற்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அதிக அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு மனவருத்தங்கள் நீங்கும். நெருங்கியவர்களின் தேவைகளை உணர்ந்து உதவி செய்வீர்கள்.

மகரம் : செலவுகளில் கட்டுப்பாடு தேவை. வாழ்வில் முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத தடைகள் குறுக்கிட்டாலும் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.

கும்பம் : வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். பயணங்களின் போது பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் விமர்சனங்களுக்கு ஏற்ற உங்களை மாற்றிக் கொள்வது நல்லது.

மீனம்: மனதைரியம் கூடும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகள் குறையும். அலுவலகத்தில் எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செய்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றத்தை சந்திப்பீர்கள்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 20ம் தேதி, 11.8.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி ...