Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 13/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 13/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, துல்ஹாதா 21ம் தேதி,
13.7.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி மாலை 6:30 வரை,
அதன்பின் நவமி திதி, ரேவதி நட்சத்திரம் பகல் 12:10 வரை,
அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம்
* பொது : பைரவர் வழிபாடு.

 

மேஷம்: எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாட்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் அவசரப்படாமல் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மகனின் திருமண முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

ரிஷபம்: உங்களை எதிர்ப்போரிடம் கூடக் கனிவாக பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுநல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத வகையில் நண்பரின் சந்திப்பு நிகழும்.

மிதுனம்: சக ஊழியர்களால் சிறு சிரமங்கள் ஏற்படக்கூடும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள் தொட்டது துலங்கும். கணவன், மனைவிக்கு இடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வது நல்லது.

கடகம்: முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். வாகனங்கள் ஓட்டும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் வீண் கவலை உண்டாகும். நீங்கள் முன்பிருந்த பிரச்னைகளிலிருந்து மீண்டு வருவீர்கள். பிள்ளைகள் நல்ல செய்தி கொண்டு வருவார்கள்.

சிம்மம் : வியாபாரிகளுக்கு நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் தீரும். அலுவலகத்தில் சகஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.

கன்னி: அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

துலாம்: உத்யோகஸ்தர்கள் நிலுவைப் பணிகளை முடித்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவர். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் லேசாக பாதிக்கப்பட்டாலும் உரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம் : கூடுதல் முயற்சியால் வருமானம் அதிகரிக்கும். மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது பொறுமையை கடைபிடித்தால் அதிக லாபத்தை பெறலாம்.

தனுசு: கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவியை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மகளின் செயலால் பெருமிதம் கொள்வீர்கள்.

மகரம்: உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான முயற்சிகளில் அவசரம் காட்ட வேண்டாம்.

கும்பம்: சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அக்கம் பக்கத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும். அலுவலக பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

மீனம்: வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அலுவலக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தில் புதிய விஷயத்தை கற்றுக் கொள்வீர்கள். பொது விவகாரங்களில் ஈடுபட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...