Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 12/02/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 12/02/2020

இன்று!
விகாரி வருடம், தை மாதம் 29ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 17ம் தேதி,
12.2.2020 புதன்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி காலை 7:15 வரை,
அதன் பின் சதுர்த்தி திதி நாளை அதிகாலை 4:14 வரை,
உத்திரம் நட்சத்திரம் மாலை 4:17 வரை, அதன்பின் ஹஸ்தம் நட்சத்திரம், அமிர்த-மரணயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: பகல் 12:00-1:30 மணி
எமகண்டம்: காலை 7:30-9:00 மணி
குளிகை: காலை 10:30-12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
பொது சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம்: புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர்களின் உதவி மனதிற்கு ஊக்கம் தரும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றத்தை செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம்: சுற்றுப்புற சூழல் மன அமைதியை கெடுக்கும். பொறுமை குணத்தால் சிரமத்தை தவிர்க்கலாம். தொழில், வியாபார நடைமுறை சீராகும். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை கொள்வர்.

மிதுனம்: கூடுதல் பணிகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். நற்பெயரை பாதுகாக்க சிலரது உதவியை நாடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை போதுமான அளவில் இருக்கும். குடும்ப தேவை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்புடன் கலையையும் ஆர்வமாக பயில்வர்.

கடகம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். லாப விகிதம் அதிகரிக்கும். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனஅமைதி பெறுவீர்கள். மனைவி கணவரின் அன்பில் மகிழ்வீர்கள்.

சிம்மம்: கூடுதல் பணி மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கைத் தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

கன்னி: நிலுவை பணியை சரிசெய்வீர்கள். குடும்பத்தினர் உற்சாக மனதுடன் வாழ்த்துவர். தொழில், வியாபாரத்தில் உருவாகும் போட்டியை விட்டுக் கொடுக்கும் தன்மையினால் சரிசெய்வீர்கள். பணவரவு திருப்திகரமாகும். இளமைக்கால இனிய நிகழ்வுகளை நினைத்து மகிழ்வீர்கள்.

துலாம்: மனதில் சிறு சஞ்சலம் வந்து விலகும். குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணியை நிறைவேற்றுவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

விருச்சிகம்: சவால்களை ஏற்று வெற்றி அடைவதற்கான எண்ணம் வளரும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணவரவுடன் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பிள்ளைகள் நலனில் பெண்கள் அக்கறை கொள்வர்.

தனுசு: மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். சுற்றத்தார்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவீர்கள். சத்தான உணவினை உண்டு மகிழ்வீர்கள்.

மகரம்: சிலர் சுயநலம் கருதி உதவ முன்வருவர். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக பணிபுரிந்து எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். ஒவ்வாத உணவினை தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியம் பலம்பெறும். மாணவர்கள் கவனமுடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

கும்பம்: செயல்களில் நிதானம் அவசியம். பேசும் வார்த்தை குளறுபடியாகலாம். தொழில், வியாபாரத்தில் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். வாகன பயன்பாட்டில் மிதவேகத்தை பின்பற்றுவீர்கள்.

மீனம்: வசீகர பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். தொழில், வியாபாரம் செழிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி ...

%d bloggers like this: