Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 12/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 12/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 28ம் தேதி, துல்ஹாதா 20ம் தேதி,
12.7.2020 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி மாலை 4:33 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 9:34 வரை,
அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : உத்திரம்
* பொது: முகூர்த்தநாள்.

 

மேஷம்: புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டு. சிலருக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் இதுவரை இருந்த பொருளாதார ரீதியான பிரச்னைகள் குறையும்.

ரிஷபம்: வீடு வாங்க திட்டமிட்டவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். மன தைரியம் அதிகரிக்கும்.

மிதுனம் : எதிர்பாராத வகையில் சிறு செலவுகள் உண்டாகும். மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். வியாபாரத்தில் முக்கிய பிரமுகரின் அறிமுகம் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும்.

கடகம்: வியாபாரிகளுக்குப் பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். அலுவலகத்தில் முன்னர் செய்த உழைப்பின் பலனை இப்போது பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார்.

சிம்மம் : எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. அலுவலக பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படும்.

கன்னி: குடும்பத்தில் சிறிய மனவருத்தங்கள் வந்து நீங்கும். பிள்ளைகளின் மூலம் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தாய்மாமன் வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை.

துலாம்: தகுதியான வேலை கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும்.

விருச்சிகம் : குடும்பச் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்னை தீரும். தொழிலில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தால் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் செயல்கள் சகஊழியர்களால் பாராட்டப்படும். நல்லவர்களின் ஆசி கிடைக்கும்.

தனுசு: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நண்பர்கள், உறவினர்கள் மத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பூர்வ சொத்து சம்மந்தப்பட்ட வகையில் ஆதாயம் உண்டு.

மகரம்: புதிய முயற்சிகளில் சில தடைக்கு பிறகு அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மனைவி வழி உறவினர்கள் மூலம் கடன்களை அடைப்பதற்கான உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம் : குடும்பத்தினர் உங்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெண்களுக்கு மனஅமைதியற்ற சூழல் ஏற்படும். மேலதிகாரிகளின் மூலம் உங்களின் நிறை, குறைகளை அறிந்து கொள்வீர்கள். நியாயமான வழியில் பணம் சேர்ப்பீர்கள்.

மீனம்: மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்காததால் வருந்துவீர்கள். அரசாங்கப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணியாளர்கள் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க வேண்டிய சூழல் உருவாகும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...