Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/02/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/02/2020

இன்று!

விகாரி வருடம், தை மாதம் 28ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 16ம் தேதி,
11.2.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி, காலை 9:32 வரை,
அதன் பின் திரிதியை திதி, பூரம் நட்சத்திரம் மாலை 5:57 வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: பகல் 3:00-4:30 மணி
எமகண்டம்: காலை 9:00-10:30 மணி
குளிகை: பகல் 12:00-1:30 மணி

சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது துர்கை வழிபாடு.

 

மேஷம்: உங்களின் நல்ல செயலை சிலர் கேலி பேசுவர். நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய யுக்தியை கையாள்வீர்கள். சீரான அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்புச் செலவு ஏற்படலாம்.

ரிஷபம்: எதிரான சூழ்நிலை நிலவினாலும் மனசாட்சியுடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகிற குளறுபடியை மாற்று உபாயத்தால் சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் அவசர செலவுகளுக்கு பயன்படும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

மிதுனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திட்டமிட்ட இலக்கை எட்டும். உபரி பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

கடகம்: பேச்சு, செயலில் தயக்கம் ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். விஷப்பிராணிகளிடம் இருந்து விலகுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்: மதி நுட்பத்துடன் செயல்படுவீர்கள். முயற்சிகளுக்கான பலன் திருப்திகரமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்கும். சமூகத்தில் தனி அந்தஸ்தை பெறுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: சொந்த விஷயங்களை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தெய்வ அனுகூலத்தால் நினைத்த செயல் அனைத்தும் நிறைவேறும். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பினால் புதிய இலக்கை எட்டும். சிக்கனமாக செலவு செய்வீர்கள். பொருட்களை கடனாக கொடுக்க, வாங்க வேண்டாம்.

துலாம்: சிலருக்கு சரியான நேரத்தில் உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றத்தை செய்வது நல்லது. பணவரவுடன் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டை பெறுவீர்கள்.

விருச்சிகம்: செயல்கள் அனைத்திலும் நேர்த்தி காணப்படும். குடும்பத்தினரால் பாராட்டும் பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் முன்னேற்றகரமான பலன் உண்டு. பிள்ளைகள் விரும்பிக் கேட்ட பொருளை வாங்கித்தருவீர்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு: வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். எந்தச் செயலிலும் பொறுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் பயனளிக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தரமற்ற உணவினை வாங்க நேரிடலாம். தியானம் மனஅமைதியை தரும்.

மகரம்: மாற்று கருத்து உடையவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவீர்கள். சிக்கனம் சிரமத்தை தவிர்க்க உதவும். சத்தான உணவினை உண்டு உடல்நலத்தை பாதுகாப்பீர்கள்.

கும்பம்: செயல்களில் இரக்க குணம் வெளிப்படும். பிறருக்கு உதவுவதை விருப்பமாக கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து புதிய இலக்கை அடையும். உபரி வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி திட்டமிட்டபடி நிறைவேறும். உபரி வருமானம் சேமிப்பை அதிகரிக்கும். குடும்ப விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி ...

%d bloggers like this: