Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/07/2020

இன்று!
சார்வரி வருடம், ஆனி மாதம் 27ம் தேதி, துல்ஹாதா 19ம் தேதி,
11.7.2020 சனிக்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி பகல் 2:40 வரை,
அதன்பின் சப்தமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 7:08 வரை,
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : பூரம்
* பொது சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். வராது என்று நினைத்த பணத்தை வட்டியுடன் வசூலிப்பீர்கள். பெண்களின் பயம் நீங்கும் படியான மாற்றங்கள் நிகழும்.

ரிஷபம் : மறைமுக எதிரிகளால் பிரச்னை வரும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்கள் உங்களுடன் வந்து இணைவர். வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். சிறு வருத்தங்கள் மறையும்.

மிதுனம் : குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாலினத்தினரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கடகம்: கலைத் துறையினரின் முயற்சிக்கேற்ற புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

சிம்மம் : வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒத்துப்போவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதை சமாளிப்பீர்கள். உற்றார் உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி : பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். உறவினர்களால் சிறு சிறு சிக்கல்கள் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் இருக்கும் பிரச்னைகளை நம்பிக்கையானவர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பீர்கள்.

துலாம்: குடும்ப நிதிநிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் உள்ள பாக்கிகள் வசூலாகும். எதிர்பாலினத்தினரின் நட்பால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் தேடிவரும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.

விருச்சிகம்: எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் முக்கிய பணிகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். பெண்களுக்கு எதிர்கால வாழ்வை பற்றிய பயம் நீங்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

தனுசு : சகஊழியர்களின் குடும்ப பிரச்னைகளில் தலையிட வேண்டாம். இரவு நேரத்தல் நீண்ட துாரப் பயணங்களை தவிர்க்க வேண்டும். பெண்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வர். எதிர்பாராத பணவரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

மகரம்: தந்தையின் உடல்நல பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உத்யோகத்தில் பொறுப்பு மிகவும் அதிகரிக்கும். குடும்ப நிதிநிலைமையைச் சமாளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும்.

கும்பம் : மகளின் திருமண விஷயத்தில் பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய வேலை வாய்ப்புகள் கைகூடி வரும். புதிதாக தொழில் ஆரம்பிக்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

மீனம்: மனைவி வழி உறவினரின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் சில நடைமுறைகளை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனையால் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...