Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 10/02/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 10/02/2020

இன்று!
விகாரி வருடம், தை மாதம் 27ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 15ம் தேதி,
10.2.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி காலை 11:45 வரை,
அதன் பின் துவிதியை திதி, மகம் நட்சத்திரம் இரவு 7:28 வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண-சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 6:00-7:30 மணி
ராகு காலம்: காலை 7:30-9:00 மணி
எமகண்டம்: காலை 10:30-12:00 மணி
குளிகை: பகல் 1:30-3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
பொது சிவன் வழிபாடு

 

மேஷம்: செயலில் தடுமாற்றம் தென்படும். நிதானம், அக்கறையை பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். தியானம் மன அமைதியை தரும்.

ரிஷபம்: அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த பிரச்னையை பற்றி பேச வேண்டாம். தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு பயனளிக்கும். அதிக பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். சத்தான உணவினை எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை காப்பீர்கள்.

மிதுனம்: செயல்களில் அன்பின் குணம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வது நன்மை தரும். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வேலைப்பளு உருவாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பு முறையை பின்பற்றுவது மிகுந்த பயனளிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்: திட்டமிட்ட செயலை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினரால் பாராட்டும் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கன்னி: சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். சொந்த உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள தாமதம் சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பிள்ளைகள் நலனில் பெண்கள் அக்கறை கொள்வர்.

துலாம்: நண்பர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவுடன் நன்மையும் உருவாகும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

விருச்சிகம்: செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். நன்றி மறந்தவரை பெருந்தன்மை குணத்துடன் மன்னிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும்.

தனுசு: சிலரது செயல் மனதில் அதிருப்தியை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் பயில்வர்.

மகரம்: திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். நண்பரின் ஆலோசனை நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சீரான ஓய்வு மனதிற்கு புத்துணர்வு தரும்.

கும்பம்: நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாளாக தேடிய பொருள் புதிய முயற்சியால் கைக்கு கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சி வளரும்.

மீனம்: சிறு செயல் கூட பலமடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் அக்கறையுடன் பணிபுரிந்து திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நீண்ட நாள் வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 21/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி ...

%d bloggers like this: