Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 10/07/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 10/07/2020

இன்று!                                                                                                                                                                சார்வரி வருடம், ஆனி மாதம் 26ம் தேதி, துல்ஹாதா 18ம் தேதி,
10.7.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி பகல் 12:59 வரை,
அதன்பின் சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : மகம்
* பொது: குபேரர் வழிபாடு.

 

மேஷம்: கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இக்காட்டான சூழலில் சகஊழியர்கள் தரும் ஒத்துழைப்பால் நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு உண்டு. நெருங்கிய உறவினர் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

ரிஷபம்: உறவினர் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். வியாபாரத்தில் சில முயற்சிகளை செய்து லாபத்தை பெருக்குவீர்கள். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.

மிதுனம் : பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தங்களின் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். தாயின் ஆரோக்கிய பிரச்னைகள் குறையும்.

கடகம்: கடந்த சில நாளாக இருந்த பிரச்னைகள் குறைந்து மனம் லேசாகும். அலுவலகத்தில் கடினமான பணிகளை செய்து மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனைவியின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள்.

சிம்மம் : அலுவலகத்தில் அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம். வியாபாரிகள் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். முக்கியச் செலவுக்காக பணம் புரட்ட முடியாமல் தவித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

கன்னி: பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் இருந்த நிம்மதியற்ற சூழ்நிலை மாறும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

துலாம்: முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். மனைவியை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களை தேடிவரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் சுபச்செலவுகளை செய்வீர்கள். அலுவலகத்தில் எடுக்கும் புதிய முயற்சிக்கு மேலதிகாரியின் ஆதரவு இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

தனுசு : வேலையில் சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் பணிச்சுமை குறையும். உறவினர் மத்தியில் உங்களின் செல்வாக்கு கூடும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். அக்கம் பக்கத்தினருடைய ஆதரவு கிடைக்கும்.

மகரம்: பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும். சுபநிகழ்ச்சி ஏற்பாடுகளால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

கும்பம்: மனதில் இருந்த அவநம்பிக்கை நீங்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். தர்மச் செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நற்பலன் கிடைக்கும்.

மீனம்: கவலைகள் மறைந்து புதிய நம்பிக்கை பிறக்கும். நண்பர்களால் நன்மை கூடும். கலைஞர்கள் பலகாலம் கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிப்பதில் ஆர்வம் காட்டுவர். வியாபாரத்தில் உள்ள போட்டிகளைச் சமாளிக்க கூடுதலாக உழைக்க வேண்டிவரும்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...