Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 04/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 04/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 20ம் தேதி, துல்ஹஜ் 13ம் தேதி,
4.8.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி இரவு 10:17 வரை,
அதன்பின் துவிதியை திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 9:12 வரை,
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால்
* சந்திராஷ்டமம் : புனர்பூசம்
* பொது : காயத்ரி ஜபம், கரிநாள்

 

மேஷம்: பேச்சினால் சில விஷயங்களை முடிக்கும் நாள். உறவினர்கள் மதிப்பார்கள். உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். ஒற்றுமையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் திருப்தியைப் பெறுவீர்கள்.

ரிஷபம்: கடந்த நாட்களின் வருத்தங்கள் மறையும் நாள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சி பற்றி பேசுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகம் வரும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

மிதுனம் : செலவினங்கள் அதிகரிக்கும் நாள். மற்றவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும். லேசான வருத்தமளிக்கும் செய்தி வரும். பணிகளில் மிகுந்த கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம்.

கடகம்: திட்டமிடாத செலவுகள் வரும் நாள். பிறரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலதிகாரி உங்களை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு பிரச்னைகள் தீரும்.

சிம்மம்: மாறுபட்ட நாள். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்கள் மதிப்பார்கள். அலுவலகத்தில் இழந்த உரிமைகள் மீளும். தொழிலில் சிறு மாற்றம் உண்டாகும். மனக்கலக்கங்கள் தீரும். பணவரவு தாமதமாகக்கூடும்.

கன்னி: பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிக்கும் நாள். முயற்சியால் சில விஷயங்கள் வெற்றியாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து தேவையின்றி கவலைப்படுவீர்கள். பணியில் முன்னேறுவீர்கள்.

துலாம் : அதிகம் உழைக்க வேண்டியிருக்கும் நாள். நிலுவைத் தொகைகள் வசூலாகும். அலுவலகத்தில் உங்களின் புகழ் கூடும். திட்டமிட்ட செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பெண்களுக்கு வெளியூரிலிருந்து சுபச்செய்தி வரும்.

விருச்சிகம்: தம்பதி இடையே கருத்து வேறுபாடு வந்து நீங்கும் நாள். பழைய கடனை நினைத்து கவலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சுலபமாகச் சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவு தேவை.

தனுசு : பணியில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களுக்காக விட்டு கொடுப்பீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனதில் உற்சாகம் கூடும்.

மகரம் : புதியவர்களின் நட்பு கிடைக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்கள் சிறு ஏமாற்றத்தை சந்திப்பர். வெளியூரிலிருந்து சுபச்செய்தி செய்தி வரும். கணவரின் ஆதரவு திருப்தி தரும்.

கும்பம்: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றும் நாள். பணவரவு திருப்தி தரும். பெண்கள் பாடுபட்டு லட்சியத்தை அடைவர். புது வேலைக்கான முயற்சிகள் மனநிறைவு அளிக்கும். விரோதங்கள் விலகும்.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் நாடி வருவார்கள்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

செப்டம்பர் 23,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி, ஸபர் 5ம் தேதி, 23.9.2020 புதன்கிழமை, வளர்பிறை, ...