Home / ஆன்மீகம் / RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று!
சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி,
2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 10:03 வரை,
அதன்பின் பவுர்ணமி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 8:07 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
* பொது : ஆடிப்பெருக்கு.

 

மேஷம்: பிரச்னை கட்டுக்குள் இருக்கும் நாள். வியாபாரத்தில் நேற்றிருந்த கவலைகள் தீரும். திருமணம் பற்றி நல்ல செய்திகள் வரும். வெளிநாட்டு முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

ரிஷபம்: எதிர்பார்த்த தனவரவு தாமதமாகும் நாள். பணியில் வெற்றிக்கு போராட வேண்டியிருக்கும். அரசாங்க உதவிகள் கிடைப்பதில் தடை ஏற்படும். பெண்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். கலைஞர்கள் சலிப்படையக்கூடும்.

மிதுனம் : உடல் நிலை பற்றி பயம் வந்து நீங்கும் நாள். கடுமையான முயற்சிகளால் களைப்படைய வாய்ப்புள்ளது. பூர்வ சொத்து பற்றிய வழக்கு இழுபறியாகவே இருக்கும். பேச்சில் கவனம் தேவை. பணிச்சுமையால் பொறுமை இழக்கலாம்.

கடகம்: மனதில் மகிழ்ச்சி நிலவும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்வீர்கள். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பேச்சினால் நன்மை விளையும்.

சிம்மம் : வீண் அலைச்சல்கள் முடிவுக்கு வரும் நாள். கலைஞர்களின் வெற்றிக்கு முயற்சி தேவை. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணியில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

கன்னி: கூடுதல் முயற்சி காரணமாகப் பலன் கிடைக்கும் நாள். பணியாளர்கள் வேலையில் மனநிம்மதி பெறுவர். திறமைகள் வெளிப்படும். இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

துலாம்: காணாமல் போன பொருட்கள் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நல்ல செய்திகள் வரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். எடுத்த செயல்களை எளிதில் முடிப்பீர்கள்.

விருச்சிகம் : தொழிலில் ஏற்பட்ட தொல்லை நீங்கும் நாள். பணப்புழக்கம் சிறப்படையும். பணியாளர்களுக்கு நின்றுபோயிருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

தனுசு: கவலைகள் நீங்கும் நாள். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லை குறையும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விண்ணப்பித்த வேலை வாய்ப்பு கைகூடும். பெண்களுக்கு குதுாகலம் ஏற்படும்.

மகரம் : சேமிக்கும் எண்ணம் உண்டாகும் நாள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும். தீய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்கவும். எதிர்பாராத பாராட்டை பெறுவீர்கள். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம் : முயற்சிகள் வெற்றி பெறும் நாள். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். பணியாளர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். கலைத்துறை வாய்ப்புகள் திருப்தி தரும். வம்புகளிலிருந்து விலகித் தப்பிப்பீர்கள்.

மீனம்: செலவுக்கேற்ற வரவு வரும் நாள். முன்னேற்றப் பாதை கண்ணுக்குத் தெரியும். பணியாளர்கள் மனநிம்மதி அடைவர். மகன், மகள் பற்றிய கவலை தீரும். தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும். உதவிகள் கேட்டபடி கிடைக்கும்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

செப்டம்பர் 23,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி, ஸபர் 5ம் தேதி, 23.9.2020 புதன்கிழமை, வளர்பிறை, ...